Ad Space Available here

2020 க்கு பின்னரும் நாட்டில் இந்த நல்லாட்சி தொடர வேண்டும்.


தேசிய அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே காணப்படும் பிரச்சினைகளை இல்லாமற் செய்து ஒரு நிரந்தரமான நிலையான ஆட்சியை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மக்கள் எதிர்பார்க்கின்ற நிம்மதியான வாழ்வுக்கும் நிரந்தரமான சமாதானத்திற்கும் இரு பிரதான கட்சிகளின் தலைவர்கள் இருவரும் ஒருமித்து உள்வீட்டுப் பிரச்சினைளுக் கான தீர்வைப் பெற்றுக் கொண்டு 2020 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் இந்த ஆட்சி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று நகரஅபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்புத் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் மடிகே மிதியால பிரதேசத்திற்குச் செல்லும் வீதிக்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று முன்தினம் (23) மடிகே மிதியாலயத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஷ்வி ஜவஹர்ஷா தலைமையில் இடம்பெற்றது.


இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே
அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,


பல அபிவிருத்தி திட்டங்கள் குருநா கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்ப டவுள்ளன. அதில் மிகமுக்கியமானது குடி நீர்ப்பிரச்சினையாகும். இதற் கான தீர்வுகளைப் பெற்றுக் கொள் வதற்கு மிகவும் தீவிரமான முயற் சிகளிலேயே நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் செய்வதற்கு நாட்டிலே ஒரு நிலையான ஆட்சி தேவை.

தளம்பல் இல்லாமல் ஒரு ஆட்சியை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். அந்த ஆட்சி ஆட்டம் காணுவதைப் போன்ற ஒரு பார்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.


இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து இந்த தேசிய அரசியலைக் கொண்டு செல்வது என்பது இலவகுவான காரியமல்ல. கட்சியினுடைய எதிர் பார்ப்பு , கட்சி உறுப்பினருடைய எதிர்பார்ப்பு, கட்சியின் அரசியல் பிரதிநிதியினுடைய வித்தியாசமான போக்குகள், போட்டித்தன்மை என் பவைகளினால் ஒருமித்த கொள்கைப் போக்குகோடு நாங்கள் பயணிக்கின் றோமா என்கிற ஒரு சந்தேகம் மக்கள் மத்தியிலேயே ஏற்பட்டு விடும் என்ற அபாயம் இருக்கிறது.

இதை நாங்கள் களைய வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையி லும் சரி இந்த நாட்டின் சிறுபான்மை யின மக்களைப் பொறுத்தவரையி லும் சரி இந்த ஆட்சியைக் கொண்டு வந்தது அபிவிருத்தியை அனுபவிப் பதற்காக அல்ல. எங்களுக்கு எதிராக இருந்த பாதுகாப்பு பிரச்சினை, உயிர் வாழுகின்ற பிரச்சினை , எங்களு டைய சமய கலாசார நடடிக்கைகளை நிம்மதியாக செய்ய முடியாமல் இருந்த ஒரு அச்சசூழல் ஆகியவை கடந்த காலங்களில் காணப்பட்டன. இவற்றையெல்லாம் இல்லாமற் செய்ய வேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தோம்.


அந்த ஆட்சி மாற்றத்திலும் இதே மாதிரி தீவிரவாதம் தலைதூக்கிவிடும் போன்ற தொரு அச்சம் வந்தது. எனினும் இப்பொழுது அது ஒரு மாதிரி கட்டுப்பாட்டுக்குள் வந்திக்கிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாது காக்கப்படுகின்ற அதேநேரம் ஒரு நிமத்தியான வாழ்க்கை சிறுபான்மை யின மக்களுக்கு இருக்க வேண்டும். அதேவேளை நிரந்தரமாக ஒரு வெளிப்படைத் தன்மையோடு ஆட்சியைக் கொண்டு போவதற்காகவும்
மற்றும் இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை மேற் கொள்வதற்குஇருபிரதானகட்சிகளுக் கிடையே காணப்படும் உள்வீட்டுப் பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.


தேர்தல்கள் வரும் போகும் அதில் வெற்றி தொல்விகள் சம்மந்தமாக கட்சிகளுக்கிடையே பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் தேசிய அரசாங் கம் என்பது சில விசயங்களைச் சாத்தி யப்படுத்தி இருக்கிறது.
இன்று நாட்டிலே ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணுகின்றதா என் கின்ற ஒரு பிரமை ஏற்பட்டுள்ளது.

இதை இல்லாமற் செய்ய வேண்டும். அதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் ஒருமித்துப் பயணிப்பதற்காக எடுத்த முயற்சி அது இடைநடுவில் கைவி டப்பட முடியாது. அதைக் கைவிடு வதற்கு அனுமதிக்கவும் முடியாது என்றார்.

2020 க்கு பின்னரும் நாட்டில் இந்த நல்லாட்சி தொடர வேண்டும். 2020 க்கு பின்னரும் நாட்டில் இந்த நல்லாட்சி தொடர வேண்டும். Reviewed by Madawala News on 7/25/2017 08:53:00 AM Rating: 5