Ad Space avaiable

சிம்பாபே அணியுடனான தோல்வி துரதிஷ்டவசமானது. அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சார்லி ஒஸ்டின் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் தேவை ஏற்படின் தன்னிடம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 

ஸ்கைப்பின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போதே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

ஒஸ்டின் மெனேஜ்மன்ட் லிமிட்டட்டுடன் தனக்கோ, மஹெல ஜெயவர்த்தனவுக்கோ எந்தவொரு வர்த்தகத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை அணியின் வீரர்களாக இருந்த மஹெல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார உள்ளிட்ட பலருக்கு முகாமையாளராக இருந்தவர் சார்லி ஒஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இலங்கை அணியின் தற்போதைய நிலவரம் குறித்து கருத்து வௌியிட்டுள்ள சங்கக்கார, சிம்பாபே அணியுடனான தோல்வி துரதிஷ்டவசமானது எனக் கூறியுள்ளார். 

இலங்கை அணி மிகச் சிறந்த திறமை கொண்ட வீரர்களை தன்னகத்தே வைத்துள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கை அணி சிம்பாபே அணியை இலகுவாக வெல்லும் என தான் நினைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ள சங்கக்கார, எனினும் கிடைக்கப் பெற்றது எதிர்பாராததொரு முடிவு எனவும் கூறியுள்ளார். 

அத்துடன் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றே தான் கருதுவதாகவும், எனினும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் இரண்டு வருடங்களே உள்ள நிலையில், அணியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
சிம்பாபே அணியுடனான தோல்வி துரதிஷ்டவசமானது. அச்சம் கொள்ளத் தேவையில்லை. சிம்பாபே அணியுடனான தோல்வி துரதிஷ்டவசமானது. அச்சம் கொள்ளத் தேவையில்லை. Reviewed by Madawala News on 7/13/2017 01:41:00 PM Rating: 5