tg travels

கல்குடா முஸ்லிம் காங்கிரசின் இயக்குனர் சாட்டோ மன்சூர், நாபீர் பெளண்டேசனுடன் இணைவு…


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், சமூக ஆர்வலறும், முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் தீவிர அரசியல் செயற்பாட்டாளரும், கல்குடா பிரதேசத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய இயக்குணரும், சமகாலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடா பிரதேசத்தில் இருந்து மாகாண சபை வேட்பாளராக களமிறக்கப்படலாம் என பேசப்பட்ட சாட்டோ வை.எல்.மன்சூர் அம்பாறை மாவட்டத்தில் சமூக சேவைகள் அமைப்பாகவும், வருகின்ற மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் பெரும் அரசியல் சத்தியாக வரலாம் என பேசப்பட்டு வருகின்ற நாபீர் பெளண்டேசில் இணைந்து கொண்டுள்ளார்.

கடந்த 24.07.2017 அன்று உத்தியோக பூர்வமாக சம்மாந்துறையில் உள்ள பெளண்டேசனின் காரியாலையத்தில் இடம் பெற்ற நிகழ்வில் சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடைய கல்குடா தொகுதி அமைப்பாளராகவும், பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியாளர் உதுமான்கண்டு நாபீருடைய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் நாபீர் பெளண்டேசனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வில் பெளண்டேசனின் செயலாளர் ஜவாஹிர், இளைஞர் அமைப்பாளர், தானிஸ், அரசியல் செயற்பாட்டாளர் மாஹிர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த வைபவத்தின் பொழுது ஊடகங்களுக்கு தனது கருத்தினை வெளியிட்ட மன்சூர்….

நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீருக்கு சமகாலத்திற்கு பொறுத்தமான தலைமைத்துவ சபையில் நகரக்கூடிய அனைத்து வளங்களும், தகுதியும் இருப்பதாகவே நான் பார்க்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தினை சம்மாந்துறையில் இருந்துதான் ஆரம்பித்திருக்கின்றது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவரும் சம்மாந்துறை மண்ணுக்கு சொந்தக்காரனாகவே இருந்துள்ளார்கள்.

அவ்வாறான புதியதொரு பாதையில் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தினை நோக்கிய பயணமாகவே எனது நாபீர் பெளண்டேசனுடனான இணைவினை பார்க்கின்றேன்.


அந்த வகையிலே வடகிழக்கிற்கு வெளியில் உள்ள அரசியல் கலாச்சாரத்தினை அல்லது கொழும்பு அரசியலினை முஸ்லிம் காங்கிரசின் தலைமை வடகிழக்கில் தினிப்பதனையே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதினால் அது வடகிழக்கு முஸ்லிம்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கும், முக்கியாமக உறுதிப்படுத்தப்பட வேண்டிய முஸ்லிம்களினுடைய இருப்பு சம்பந்தமாக எந்த வித தீர்வினையும் பெற்றுக்கொடுக்காது என்ற காரணமே தான் நாபீர் பெளண்டேசனில் இணைந்து கொள்வதற்கு பிரதான காரணம் என தெரிவித்தார்.


ஆகவே எங்களுடைய மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை பல்வேறு துறைகளின் ஊடாக நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாக இருக்கின்றது. அந்த வகையிலே அடுத்தவருடைய குறை நிறைகளை பற்றி பேச வேண்டிய அவசியத்தில் எபோழுதும் நாங்கள் இருந்தில்லை.

முஸ்லிம் சமூகம் என்ற வகையிலே தேசிய முஸ்லிம் உம்மா எதிர் நோக்குகின்ற சவால்களுக்கு நாங்கள் எல்லோரும் சரியான இணைப்பாக்கத்தோடும், தொடர்பாடலோடும், தலைமைத்துவ சபையோடும், முன்னோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.


அந்த வகையிலே எனது பார்வையில் மனமுவர்ந்து, தன்னார்வமாக தனது பணிகளை மேற்கொண்டு வருக்கின்ற நாபீர் பெளண்டேசனும் அதனுடைய நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர், பெளண்டேசனுடைய நிருவாக உத்தியோகத்தர்கள், அரசியல் முன்னெடுப்பாளர்களுடைய செயற்பாடுகள் எல்லாம் ஒரு தூர நோக்கு சிந்தனைமிக்கதாக இருக்கின்றது.

அத்தோடு நாங்கள் நேசிக்கின்ற முக்கிய மண்ணாகவும் சம்மாந்துறை பிரதேசம் காணப்படுகின்றது. பல புரட்சிகள் சம்மாந்துறை மண்ணிலிருந்து ஏற்படுத்தப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றது. ஆகவே புதியதொரு அரசியல் கலாச்சாரத்தினை கொண்ட புரட்சியோடு முன்னோக்கி நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையோடு நாபீர் பெளண்டேசனுடன் இணைந்து கொண்டு தன்னாலான அனைத்து பங்களிப்புக்களையும் வழக்க தயாராக இருப்பதாகவும் மன்சூர் தனது அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தினார்.


சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடன் இணைந்து கொண்டு ஊடகங்களுகு தெரிவித்த கருக்கள் அடங்கிய காணொளி இங்கே வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ : -

கல்குடா முஸ்லிம் காங்கிரசின் இயக்குனர் சாட்டோ மன்சூர், நாபீர் பெளண்டேசனுடன் இணைவு… கல்குடா முஸ்லிம் காங்கிரசின் இயக்குனர் சாட்டோ மன்சூர்,   நாபீர் பெளண்டேசனுடன் இணைவு… Reviewed by Madawala News on 7/26/2017 03:04:00 PM Rating: 5