tg travels

மாகாணங்களுக்கு இடையிலான போட்டித்தொடர்.. மடவளை ஷிராஸ் அசத்தல்.



-Hassim Mohamed Naleem-

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டியில் வட மாகாணம் மற்றும் மத்திய மாகாண அணிகள் நேற்று புதன் கிழமை (19) மோதின.

கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய மாகாண அணி, எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வட மாகாண அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் பெற தடுமாறினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 25.4 ஓவர்களில் வெறும் 93 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்போது மத்திய மாகாண அணிக்காக விளையாடிவரும் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான முஹமத் ஷிராஸ் சிறப்பாக பந்துவீசி 12 ஓவர்களுக்கு 2 ஓட்டமற்ற ஓவர்களுடன் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தான் விளையாடிய 3 போட்டிகளில் 16 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள ஷிராஸ், இதன் மூலம் இப்போட்டித்தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்கள் வரிசையில் டிலன்க சதகன்னை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணங்களுக்கு இடையிலான போட்டித்தொடர்.. மடவளை ஷிராஸ் அசத்தல். மாகாணங்களுக்கு இடையிலான போட்டித்தொடர்.. மடவளை ஷிராஸ் அசத்தல். Reviewed by Madawala News on 7/20/2017 08:34:00 AM Rating: 5