Ad Space avaiable

தான் புகைத்த சுருட்டை அணைக்காமல் தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கிய பெண் தீயில் எரிந்து பலி. #இலங்கை


பற்ற வைத்த  சுருட்டினை அணைக்காமல் தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கிய பெண்மீது தீ பற்றிக்கொண்டதில் உடல் முழு வதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத் தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தி னம் மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.


கரவெட்டி மத்தி கரவெட்டி பகுதியினை சேர்ந்த சின்னத் தம்பி லட்சுமி  என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் மேற்படி பெண்  சுருட்டு ஒன்றினை புகைத்துள்ளார். பற்றிய சுருட் டின் தனலை அணைக்காமல் அதனை தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கி விட்டார்.

இதன்போது சுருட்டின் தணல் மெத்தை மீது பற்றி எரிந்ததில் மூதாட்டியும் மெத்தையுடன் சேர்ந்துதீயில் எரிந்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பிள்ளைகள் பார்த்த போது தாய் தீயில் எரிந்த நிலையில் காப் பாற்றி அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்திய சாலையின் திடீர் இறப்பு நமசிவாயம் பிறேம்கும ரர் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

தான் புகைத்த சுருட்டை அணைக்காமல் தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கிய பெண் தீயில் எரிந்து பலி. #இலங்கை  தான் புகைத்த சுருட்டை அணைக்காமல் தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கிய பெண் தீயில் எரிந்து பலி. #இலங்கை Reviewed by Madawala News on 7/24/2017 12:26:00 PM Rating: 5