Ad Space avaiable

ஜிப்சீஸ் சுனில் பெரேரா மீது கடுமையாக தாக்குதல்.. ராஜபக்சர்களின் பெயர்களை கேலி செய்ததால் தாக்கபட்டதாக தகவல்.


இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா மீது  குழுவொன்று கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் பாடல் பாடிய ஜிப்ஸிஸ் இசை குழு தலைவர் சுனில் பெரேரா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுனில் பெரேரா தனது பாடலில் ராஜபக்சர்களின் பெயர்களை பயன்படுத்தி ஆணவத்துடன் பாடியமையினால் கோபமடைந்தவர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே நிறைவடைந்துள்ளதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக செயற்பட்ட சுயாதீன தொலைக்காட்சியை சேர்ந்தவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த மோதலை அடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களினால் அதனை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களிலும் பாடகர் சுனில் பெரேரா இவ்வாறு ராஜபக்சர்களின் பெயர்களை பயன்படுத்தியுள்ளமையினால் மோதல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://nethgossip.lk/article/26796
ஜிப்சீஸ் சுனில் பெரேரா மீது கடுமையாக தாக்குதல்.. ராஜபக்சர்களின் பெயர்களை கேலி செய்ததால் தாக்கபட்டதாக தகவல். ஜிப்சீஸ் சுனில் பெரேரா மீது கடுமையாக தாக்குதல்.. ராஜபக்சர்களின் பெயர்களை கேலி செய்ததால் தாக்கபட்டதாக தகவல். Reviewed by Madawala News on 7/02/2017 05:17:00 PM Rating: 5