Kidny

Kidny

கெக்கிராவ பிரதேசத்தில் டார்ச் லைட்டினால் அடித்து ஒருவர் கொலை. (படங்கள்)

மின் விளக்கினால் (Torch light) தலையில் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடனிதிகம பிரதேசத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய் தகராறு முற்றியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உடனிதிகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மற்றொரு நபரின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபரை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கெக்கிராவ வைத்திசாலையில் அனுமதித்த பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் விளக்கினால் தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் கெக்கிராவ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் உயிரிழந்தவர் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.



கெக்கிராவ பிரதேசத்தில் டார்ச் லைட்டினால் அடித்து ஒருவர் கொலை. (படங்கள்) கெக்கிராவ பிரதேசத்தில் டார்ச் லைட்டினால் அடித்து ஒருவர் கொலை. (படங்கள்) Reviewed by Madawala News on 7/05/2017 07:04:00 AM Rating: 5