tg travels

36 தடயங்களில் விந்துக்களை அடையாளம் காண முடியவில்லை.


பகுப்பாய்விற்கு 36 சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதாகவும் மனித இரத்தம் அடையா ளம் காணப்பட்ட போதிலும் விந்துக்களை அடையாளம் காணமுடியவில்லை என்றும் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்க ளத்தின் சிரேஷ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார
 யாழ்.மேல் நீதிமன்றில்  நேற்று (24) சாட்சியமளித்தார்.

யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியா  படுகொலை வழக்கின் மூன்றாம்
கட்ட விசாரணை ட்ரயல்பார் நீதி மன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்  போது 52வது சாட்சியாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார சாட்சியமளித்தார்.

 அவரின் சாட்சியம் பின்வருமாறு:

கேள்வி :
எவ்வளவுகாலமாக கடமை யாற்றுகின்றீர்கள்?

பதில் :
1993 ஆம் ஆண்டில் இருந்து 23 வருடங்களாக கடமையாற்றுகின்றேன்.

கேள்வி:
எத்தனை பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்:
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளேன். 500ற்கு மேற்பட்ட மரபணு அறிக்கைகளை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளேன். நூறிற்கும் மேற்பட்ட மரபணு சாட்சியங்களை அளித்துள்
ளேன்.

கேள்வி: இந்த வழக்கின் சான் றுப்பொருட்கள் பகுப்பாய்விற்காக
எப்போது கிடைக்கப்பெற்றன?

பதில் 3 தடவைகள். 2015 ஆம் ஆண்டு யூன் மாதம்01 ஆம் திகதிய கட் டளையின் பிரகாரம் 2015 யூன் மாதம் 03ஆம் திகதி கிடைக்கப்பெற்றது.
குறித்த சான்றுப்பொருட்கள் வழங் கியதற்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப் பட்டதா?

பதில்: ஆம்

கேள்வி குறித்த சான்றுப்பொருட் களை வழங்கியது யார்?

 பதில் அரசசட்டவைத்திய அதிகாரி.

கேள்வி: பகுப்பாய்விற்கு எத்தனை சான்றுப்பொருட்கள் கிடைக்கப்பட்டன ?

பதில் 36 சான்றுப்பொருட்கள்

 கேள்வி பகுப்பாய்விற்கு என் னென்ன சான்றுப்பொருட்கள் கிடைக் கப்பட்டன எனக் கூறமுடியுமா?

பதில்:
1 முதல் 6 வரை உரோம மாதிரிகள் .
7வது சான்றுப்பொருள் சட்டை,
8வது கைக்குட்டை,
9வது சப்பாத்து,
10வது தலைப்பட்டி,
15வது ரிபன் ஒன்று,
16வது உள்ளாடை,
18வது தனிப்பட்டி,
19வது உள்பாவாடை,
20வது இடுப்பு பட்டி,
21வது மார்புக் கச்சை,
22வது காலுறை
23வது இரத்தமாதிரிகள்,
24வது ரிசேட்
25வது ரிசேட்
26வது நீள காற்சட்டை,
27வது அரைக்காற்சட்டை,
28வது சேட் ஒன்று,
29வது நகமாதிரிகள்,
30வது சொக்ஸ்,
31வது இரத்தமாதிரிகள்,
32வது இரத்தமாதிரிகள்,
33வது இரத்த மாதிரி இந்திரகுமார்,
34வது இரத்தமாதிரி ஜெயக்குமார்,
35வது இரத்தமாதிரி தவக்குமார்
36வது சசிதரன் இரத்தமாதிரி,
37வது இரத்தமாதிரி சந்திரகாந்தன்,
38வது இரத்தமாதிரி உசாந்தன்,
40வது இரத்தமாதிரிகோகுலன்,
41வது இரத்தமாதிரி மகாலிங்கம் சசிக்குமார்

போன்ற சான்றுப்பொருட்களை பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கேள்வி இலக்கம் 3ல் என்ன குறிப் பிட்டுள்ளீர்?

பதில் மனித இரத்த மாதிரிகளை அடையாளம் காணமுடிந்தது.விந்துக்களை அடையாளம் காணமுடிய வில்லை.

32வது இரத்த மாதிரியும் இறந்த பெண்ணின் இரத்த மாதிரியும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுகின்றன.

26வது சான்றுப்பொருளான நீளக் காற்சட்டை மீது காணப்பட்ட இரத்த மாதிரிகளும் பெண்ணின் யோனியில் காணப்பட்ட இரத்தமாதிரிகளும் இறந்த பெண்ணினது அல்ல என்றும் முடிவாகின்றது.

கேள்வி: இரத்தம் மங்கிய நிலையில் காணப்படுவதற்கு எவ்வளவு காலம்
எடுக்கும்.

பதில் நீர் பட்டால் மங்கிய நிலையில் காணப்படும்.
ஏதாவது திரவம் பட்டாலும் நிறம் மாறும் என மன்றில் சாட்சியமளித்தார்.



36 தடயங்களில் விந்துக்களை அடையாளம் காண முடியவில்லை. 36 தடயங்களில் விந்துக்களை அடையாளம் காண முடியவில்லை. Reviewed by Madawala News on 7/25/2017 08:33:00 AM Rating: 5