Ad Space avaiable

எதுர்கான் அரசை காப்பாற்ற போராடி உயிர்நீத்த சஹீத் கன்தர்சி பெயரில் வட்டதெனியில் அனாதை இல்லம்.


-எம்.எம்.எம். ரம்ஸீன்- 

துருக்கிய அரசாங்கம் இலங்கை வாழ் சகோதரர்கள் விடயத்தில் அக்கறையுடன் செய்ப்பட்டு வந்துள்ளதாக  இலங்கைக்கான துருக்கிய தூதுவர் துன்ஜா உஸ்ஹாதர் குறிப்பிட்டார்.

உடுநுவர வட்டதெனியவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மாணவிகளுக்கான சுவனத்து முத்துக்கள் அனாதை இல்லத்தில் துருக்கிய சதகதாஸி நிறுவனத்தின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில்   நிலையத்தின் பணிப்பாளர் சாஜஹான் உடையாhர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் துருக்கி அரச துறை முதலீட்டுத் திட்டங்களில் மட்டுமன்றி அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்களிலும் பங்களிப்பு செய்து வருகின்றது. இலங்கையில் தற்போது எட்டு செயற்றிட்டங்களில் துருக்கி பங்குகொண்டுள்ளது.  துருக்கி அரசாங்கம் இலங்கை மக்களுடன் நெருக்கமான உறவைப் பராமரித்து வருகின்றது. இங்கு வாழும் எமது சகோதரர்களின் நலன்;களில் அக்கறையுடுன் உள்ளோம்.


இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் ஆரம்ப காலம் தொட்டு மிக நெருக்கமாக தொடர்பு நிலவி வருகின்றது. இந்நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவி வருகின்றோம். இப்பணியில் துருக்கிய அரசசார்பற்ற நிறுவனங்களும்  தமது பணியை முன்னெடுத்து வருகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் பல கடந்த ரமளான் காலத்தில் இலங்கையில் வாழும் எமது சகோரதரர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கியுள்ளன.

இவை துருக்;கியில் வாழும் உங்கள் சகோதரர்கள் உங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகின்றது. எனவே, இதன் மூலம் உங்களது தேவைகளுக்கு துருக்கி முன்நிற்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

துருக்கியில் தலைவர் ரஜப் தையுப் அர்துஹான் தலைமையில் தெரிவாகிய அரசாங்கத்தை கவிழ்க்க 2016 ஜுலை 15 இல் ஒரு கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 249 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இக்கிளர்ச்சியை பொதுமக்கள் முன்வந்து முறியடித்தனர். இக் கிளர்ச்சியை முறியடித்து தாய் நாட்டை பாதுகாக்க போராடி உயிர்நீத்த  போராளி  சஹீத் கன்தர்சி அவர்களின் பெயரில் அனாதை இல்ல  கட்டிடத்தொகுதி அவரின் நண்பர்களால் சதகதாஸி நிறுவனத்தின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கடடிடத்தொகுதி கணணிப் பிரிவு , வாசிகசாலை , விடுதி வசதி உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இது பெறுமதிமிக்க  பணியாகும்.

இங்கு நிலையத்தின் பணிப்பாளர் சாஜஹான் உடையாhர் உரையாற்றும் போது,

உடுநுவரை வட்டதெனியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள சுவனத்து முத்துக்கள் அனாதை இல்ல திட்டம் துருக்கி நாட்டு உதவியை மட்டும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அல்ல.

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாக அமைந்திருந்தது. 2015 செப்டம்பர் மாதம் ரமளானில் கம்பளையில் லெனோன் அனாதை இல்லத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் சிறப்புரையாற்ற சென்றிருந்தேன்.

 இந்த  அனாதை இல்லத்தின் நிர்வாகிகள் அங்கு   அனாதையாக தஞ்சம் புகுந்திருந்த ஈமானை உள்வாங்கிய  மூன்று மாணவிகள் பற்றி  எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இவர்கள் அங்கு ஈமானுக்கு புறம்பான சூழலில் வளர்கின்றனர் என்ற நிலையை பொறுப்பதிகாரி மாவெலகெதர சுட்டிக்காட்டினார்.

 இதற்கான காரணத்தை வினவிய போது நாட்டில் முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு இல்லமொன்று இல்லை என்ற நிலை தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தான் சுவனத்து முத்துக்கள் அனாதை இல்லம் உருவாக்கப்பட காரணமாக அமைந்தது.

கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் ஈமானுக்கு புறம்பான சூழலில் வளர்ந்து வருகின்றனர் அத்துடன் மத்திய மாகாணத்தில் 31 முஸ்லிம் மாணவிகள் பதிவு செய்யப்பட்டு ஈமானுக்கு புறம்பான சூழலில் வளர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  
இந்த இல்லத்தை கண்டி  திகணையில் அமைக்க முற்பட்ட போது அவ்விடம் முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு பொருத்தமற்ற இடமாகக் காணப்பட்டமையால் அவ்விடத்தில் ஆண் பிள்ளைகளுக்கான இல்லத்தை அமைக்க சிலர் முன்வந்தனர் எனவே இந்த இல்லத்தை வடதெனியவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த இல்லத்துடன் இணைந்ததாக பாடசாலைக் கல்விக்கான தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையான வகுப்புக்களைக் கொண்ட கல்லூரியொன்றை நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த இல்லம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எதிர்காலத்தில்   வெறும் அனாதை இல்லமாக அடையாளப்படுத்தப்படாது ஒரு கல்லூரியாக அடையாளப்படுத்தப்படும் என்றார்.

இதில் மத்திய  மாகாண சபை உறுப்பினர்களான் எம்.டி.எம். முத்தலிப் , லாபிர் ஹாஜியார் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வு துருக்கி நாட்டு மக்களுக்கு நேரடியாக தொலைக்காட்சி அலை வரிசையில் அஞ்சல் செய்யப்பட்டது.


எதுர்கான் அரசை காப்பாற்ற போராடி உயிர்நீத்த சஹீத் கன்தர்சி பெயரில் வட்டதெனியில் அனாதை இல்லம். எதுர்கான் அரசை காப்பாற்ற போராடி உயிர்நீத்த சஹீத் கன்தர்சி பெயரில் வட்டதெனியில் அனாதை இல்லம். Reviewed by Madawala News on 7/23/2017 03:03:00 PM Rating: 5