tg travels

என்னால் இதற்கு மேலும் பாலியல் துஷ்பிரயோகத்தை தாங்க முடியாது. நான் தற்கொலை செய்கிறேன். 13 வயது சிறுமி, நண்பிக்கு கடிதம். #இலங்கை.


துஷ்பிரயோகத்தை சகிக்க முடியாமையினால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பாடசாலை நண்பிக்கு எழுதி அனுப்பிய கடிதம் தொடர் பான சம்பவமொன்று வெளியாகி யுள்ளது.

நான்கு வருடங்களாக 13 வயதுடைய சிறுமியொருவரை பல தடவைகளில் பல்வேறுபட்ட துஷ் பிரயோகங்களுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய் யப்பட்டு விளக்க மறியலில் வைக் கப்பட்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவரை ஒரு இலட்சம் ரூபா சரிரப் பிணையில் விடுதலை செய்யும்படி அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய ஹர்சன கெசூனுவெல உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை யான இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட் டுள்ளார்.சந்தேக நபரான இராணுவ கோப்ரலை நீதி மன்றில் ஆஜர்ப டுத்திய அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவின் சார்ஜன்ட் லலித் நந்தசேன முதல் பி அறிக்கையின் மூலம் தெரிவித்த தாவது.

சந்தேக நபரினால் பல தட வைகளில் பாலியல் துஷ்பிரயோகத் திற்கு உள்ளாக்கியுள்ள இச்சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளாகியுள் ளதாகவும் துஷ்பிரயோகத்தினை தன்னால் பொறுத்திருக்க முடியா மையினால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் இனி பாட சாலைக்கு சமுகமழிக்க மாட்டேன் எனவும் தனது வகுப்பு நண்பிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக வும் நீதி மன்றில் தெரிவித்த சார் ஜன்ட் பின்னர் அக்கடிதத்தை நண்பி வகுப்பாசிரியரிடம் காட்டியுள்ள தாகவும் நீதி மன்றில் தெரிவித்துள் ளார்.

அக்கடிதத்தினை பார்த்தவு டன் வகுப்பாசிரியை சிறுமியின் வீட்டுக்குச் சென்று இது தொடர் பாக அவரிடம் தகவல்களை முழு மையாக பெற்றுக்கொண்ட பின்னர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ள தாகவும் சார்ஜன்ட் லலித் நந்தசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

 துஷ் பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சிறு மியின் தாயார் மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்பிற்கு சென்றுள்ள தாகவும் நீதி மன்றில் தெரிவித்துள்ளார்.
(படம் : அடையாளப்படம் )
என்னால் இதற்கு மேலும் பாலியல் துஷ்பிரயோகத்தை தாங்க முடியாது. நான் தற்கொலை செய்கிறேன். 13 வயது சிறுமி, நண்பிக்கு கடிதம். #இலங்கை. என்னால் இதற்கு மேலும் பாலியல் துஷ்பிரயோகத்தை தாங்க முடியாது. நான் தற்கொலை செய்கிறேன். 13 வயது சிறுமி, நண்பிக்கு கடிதம். #இலங்கை. Reviewed by Madawala News on 7/24/2017 11:00:00 AM Rating: 5