Ad Space avaiable

இன்று காலை நாவலப்பிட்டி, கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.


நாவலப்பிட்டி, கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  சம்பவ இடத்திலேயே இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .


நாலவப்பிட்டியிலிருந்து கம்பளை நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கில், ஹட்டனிலலிருந்து கண்டி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த லொறியுடன்  மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில்  உயிரிழந்தவர் தொடர்பில் எந்ததொரு தகவலும் அறியப்படவில்லை. விபத்து ஏற்படுத்திய லொறி சாரதி , லொறியை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.


சம்பவம் தொடர்பில், நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை நாவலப்பிட்டி, கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி. இன்று காலை நாவலப்பிட்டி, கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி. Reviewed by Madawala News on 7/23/2017 01:00:00 PM Rating: 5