tg travels

மஞ்சள் கடவை ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவர் மீது மோதி விபத்து. காத்தான்குடி நபர் கைது.


மட்டக்களப்பு, கல்லடி பிரதான வீதி மஞ்சள் கடவை ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை மோதவைத்து விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-அப்துல் கையூம்- காத்தான்குடி
மஞ்சள் கடவை ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவர் மீது மோதி விபத்து. காத்தான்குடி நபர் கைது. மஞ்சள் கடவை ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவர் மீது மோதி விபத்து. காத்தான்குடி நபர் கைது. Reviewed by Madawala News on 7/09/2017 07:42:00 PM Rating: 5