tg travels

19 வீரர்களை பந்துவீச்சில் காயப்படுத்தினேன் . ஒருவர் மிஸ் ஆயிட்டார் : ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கூறும் கதை.


ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய முன்னாள்  வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் உச்ச பந்துவீச்சுக் கால கட்டத்தில் பலவீரர்களை தன் அதிவேக பந்துகளின் மூலம் காயப்படுத்தியுள்ளார்.

ஜஸ்டின் லாங்கர், ஸ்லேட்டர் பொண்டிங், டேமியன் மார்டின், கங் குலி உட்பட பல வீரர் களை தன் பந்துவீச்சில் காயப்படுத்தி உள்ளார்  அக்தர்.

ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது பற்றிக் கூறும்போது, சுமார் 19 துடுப்பாட்ட வீரர்களை காயப்படுத்தி வெளியேறச் செய்திருப்பதாகவும் ஆனால் தனக்கு அதில் மகிழ்ச்சியில்லை என்றாலும் ஒரே யொரு வீரரை கடுமையாகக் காயப்படுத்த விரும்பியதா கவும், சில முறை அதைச் செய்ததாகவும் தற்போது இருவரும் நெருக்கமான
நண்பர்கள் என்றும் குறிப் பிட்டிருந்தார்.

இதனையடுத்து ட்விட்டரில் அக்தர் ரசிகர்களிடையே ஆவல் மேலிட்டது, யார் அந்த வீரர் என்று. இதற்கு பதிலளிக்கும் விதமாக அவரே ட்விட்டரில், மேத்யூ ஹெய்டனையே நான் அதிகம் கடுமையாகக் காயப்படுத்த விரும்பினேன். நான் பலமுறை அப்படிச் செய்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
19 வீரர்களை பந்துவீச்சில் காயப்படுத்தினேன் . ஒருவர் மிஸ் ஆயிட்டார் : ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கூறும் கதை. 19 வீரர்களை பந்துவீச்சில் காயப்படுத்தினேன் . ஒருவர் மிஸ் ஆயிட்டார் : ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கூறும் கதை. Reviewed by Madawala News on 7/29/2017 12:30:00 PM Rating: 5