Ad Space avaiable

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய பணத்தை 7 மாதங்களில் ஈட்டியிருக்க முடியும். மேலும் குத்தகை விட்டதால் கடன்சுமையும் குறையாது.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சியம் மற்றும் கப்பல்களுக்கு
எரிபொருள் வழங்கும் உரிமையை 99 வருட குத்தகைக்கு வழங்கிய பணத்தை ஏழு மாதங்களில் ஈட்டியிருக்க முடியுமென ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநா யக்க தெரிவித்தார்.

எரிபொருள் களஞ்சியம் மற்றும் கப்பல்களுக்கு எரிபொ ருள் வழங்கும் உரிமை என்பன 120 மில்லியன் அமெரிக்க டொல ருக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங் கப்பட்டுள்ளது. எனினும் கப்பல்க ளுக்கு எரிபொருள் வழங்குவதன் ஊடாக மாதமொன்றுக்கு கிடைக்கும் வருமானம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

எனவே, சீனாவுக்கு 99 வருடங்கள் வழங்கிப்பெற்ற பணத்தை 7 மாதங்களில் ஈட்டியிருக்க முடியும். இதனால் தான் ஹம்பாந்தோட்டை எரிபொருள் களஞ்சியத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.

இருந்தபோதும் இதனைக் கருத்தில் கொள்ளாது அரசாங்கம் நாட்டின் தேசிய வளத்தை சீனாவுக்கு வழங்கி யிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மொனராகலையில் நேற்றுமுன்தி னம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக் கும்போதே ஜே.வி.பியின் தலைவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இது மாத்திரமன்றி ஹம்பாந் தோட்டை துறைமுகத்திலிருந்து தெற்கில் 100 கிலோமீற்றர் தொலை விலும், 100 கிலோமீற்றர் தொலை விலும் ஹம்பாந்தோட்டை துறை முகத்தில் முன்னெடுக்கப்படும் எந்தப் பணிகளையும் முன்னெடுக்க முடியாது என புரிந்துணர்வு ஒப் பந்தத்தில் இணங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டைக்குப் பதிலாக திக்கல்ல பகுதியில் எம்மால் கப்பல்களுக்கு எண்ணெய் வழங்க முடியாது. எனவே, இந்தப் பகுதியால் செல்லும் எந்தக் கப்பல்களுக்கும் இலங்கையர் எரிபொருள் வழங்க முடியாது.

எதிர் காலத்தில் கப்பல்களுக்கு எண்ணெய் வழங்கக் கூடிய உரிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பதன் மூலம் கடன்சுமை குறையும் எனக் கூறப்படுவது பொய்யாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்கு 1380 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின. துறைமுகத்துக்காக 400 மில்லி யன் அமெரிக்க டொலர்களைச் செல விட்டோம். இதற்குப் பெற்ற கடன்களுக்கு 15 வருடங்களுக்கு வட்டிசெலுத்த தேவையில்லை.

இவ்வாறான நிலையில் 1120 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கே தற்பொழுது ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப் பட்டுள்ளது. துறைமுகத்தை அமைக்கப்பெற்ற கடன்கூட இதனால் பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய பணத்தை 7 மாதங்களில் ஈட்டியிருக்க முடியும். மேலும் குத்தகை விட்டதால் கடன்சுமையும் குறையாது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய பணத்தை 7 மாதங்களில் ஈட்டியிருக்க முடியும். மேலும் குத்தகை விட்டதால் கடன்சுமையும்  குறையாது. Reviewed by Madawala News on 7/31/2017 10:27:00 AM Rating: 5