tg travels

தமிழ், முஸ்லிம் மக்கள் பெளத்த மதத்­திற்­கு எதிரானவர்கள் அல்ல.. தங்­க­ளது மதச்­செ­யற்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக செய்யும் உரிமைகளையே கேட்கின்றனர்.


புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் போது பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை மட்­டுப்­ப­டுத்­துங்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் என்­றுமே கோர­வில்லை. மாறாக தங்­க­ளது மதச்­செ­யற்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்­கான உரி­மை­களை மாத்­தி­ரமே கோரினர் என பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

நேற்று  களுத்­துறை தொடங்­கொடை ஸ்ரீ முத்­து­மாரி அம்மன் ஆல­யத்தில் வழி­பா­டு­களில் ஈடு­படச் சென்­றி­ருந்த போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள் ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தல் மற்றும் இன, மத வேறு­பா­டு­களை களைதல் ஆகி­ய­னவே நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். அனைத்து இனங்­களும் மதங்­களும் ஒன்­றி­ணைந்தால் மாத்­தி­ரமே நாம் ஒரு நாடு என்ற வகையில் வளர்ச்­சி­ய­டைய முடியும்.

எனவே தற்­கா­லத்தில் நாம் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் ஒன்­று­பட்டு பய­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போது புதிய அர­சி­ய­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முதன்மை நிலை மாறு­படும் என்று கூறப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான எந்த ஒரு பேச்­சுக்­களும் தற்­போது வரையில் எழ­வில்லை.

அதே­நேரம் அர­சிய­ ல­மைப்பு மாற்­றங்­க ளின் போது பெளத்த மதத்­திற்கு வழங்­கப்ப­டு­கின்ற முன்­னு­ரி­மையை மட்­டுப்படுத்த வேண்டும் என்று இந்­நாட்டு தமிழ், முஸ் லிம் மக்கள் கோர­வில்லை. அதனால் பெளத்த மத்தின் முன்­னு­ரி­மை­யையும் பாது­காத்­துக்­கொண்டு மற்­றைய மதத்­த­வர்­களின் கட­மை­களை செய்­வ­தற்கும் இட­ம­ளிக்க வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் இவ்­வா­றுதான் செயற்­ப­டு­கின்­றன. எனவே சிலர் உண்­மைக்கு புறம்­பான விட­யங்­க­ளையே கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சி­யலமைப்பு இன்னும் ஒரு சாச­ன­மாக வகுக்­க­ப்படவே இல்லை என்­கின்றபோது எந்­த­வித ஆதா­ரங்­களும் இன்­றியே இவர்கள் பேசு­கின்­றார்      கள்.

எவ்வாறாயினும் இவ்வாறு போலியான கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் குறு கிய அரசியல் நோக்கத்திலேயே செயற்படு கின்றார்கள். இந்த நிலைப்பாடுகள் தொடர்ந் தால் அழிவை நோக்கியே பயணிக்க வேண் டிய நிலை ஏற்படும் என்றார்.
தமிழ், முஸ்லிம் மக்கள் பெளத்த மதத்­திற்­கு எதிரானவர்கள் அல்ல.. தங்­க­ளது மதச்­செ­யற்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக செய்யும் உரிமைகளையே கேட்கின்றனர். தமிழ், முஸ்லிம் மக்கள் பெளத்த மதத்­திற்­கு எதிரானவர்கள் அல்ல.. தங்­க­ளது மதச்­செ­யற்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக செய்யும் உரிமைகளையே கேட்கின்றனர். Reviewed by Madawala News on 7/03/2017 11:38:00 AM Rating: 5