Ad Space avaiable

புகையிரத வீதியை கடக்க முற்பட்டபோது விபரீதம்.. குடும்பஸ்தர் பலி.

பாறுக் ஷிஹான்

சாவகச்சேரி சங்கத்தானையில் புகையிரத வீதியை கடக்க முற்பட்டபோது புகையிரதம் மோதி குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

இன்று(29) பிற்பகல் 2.10 மணியளவில் யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதம் பிரதான வீதிக்கு செல்வதற்காக புகையிரதக் கடவையை கடந்து செல்ல முற்பட்ட போது சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்னர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் பண்டைதரிப்பை சேர்ந்த சிங்காரம் சிவச்செல்வன்( வயது 58 )என்பவர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரத வீதியை கடக்க முற்பட்டபோது விபரீதம்.. குடும்பஸ்தர் பலி. புகையிரத வீதியை கடக்க முற்பட்டபோது விபரீதம்.. குடும்பஸ்தர் பலி. Reviewed by Madawala News on 7/29/2017 04:27:00 PM Rating: 5