Kidny

Kidny

மகிந்த ஆட்சிக்கு வந்ததும், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம். அதனை மக்கள் மயமாக்குவோம்.


இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை பிரித்தது போன்று சீன நிறுவனத்துக்கு
விற்கப்பட்டிருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கத்தில் மக்கள் மயமாக்குவோம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் உடுகம்போல பிரதே சத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,  நாட்டின் பாந்தோட்டை துறைமுகம் இருந்து வந்தது.

மிகப்பெரிய சொத்தான அது     தற்போது அதனையும் அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளது. அத்துடன் இந்த துறைமுகத்தை விற்பனை செய்த இந்த தினம் வரலாற்றில் பதிவாகின்றது.

இந்த தினத்தை தேசிய துக்கதினமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அத்துடன் இது அரசாங்கத்தின் மிகப்பெரிய காட்டிக் கொடுப்பாகும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் சாத்தான போது அதற்கெதிராக செயற்பட்டோம். அதன் சில சரத்துக்கள் எமக்கு எதிரானவையாகும். அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அந்த ஒப் பந்தத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை
என்றாலும் சில சரத்துக்களை நிராகரித்தோம். அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்கு இணைக் கப்பட்டது.


மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை பிரித்தோம்.

அதேபோன்று மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் சீன கம்பனிக்கு விற்கப்பட்டிருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மக்கள் மயமாக்க நடவடிக்கை எடுப்போம் .ஒப்பந்தத்தை  கிழித்தெறிவோம் என்றார்.
மகிந்த ஆட்சிக்கு வந்ததும், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம். அதனை மக்கள் மயமாக்குவோம். மகிந்த ஆட்சிக்கு வந்ததும், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம். அதனை மக்கள் மயமாக்குவோம். Reviewed by Madawala News on 7/31/2017 12:39:00 PM Rating: 5