tg travels

வட்டரக்க தேரருக்கு BBS முக்கியஸ்தர் கொலை அச்சுருத்தல் விடுத்த வழக்கு நாளை !


ஏ எம் எம் முஸம்மில் – பதுளை

கடந்த 2014/4/18ந் திகதி மஹியங்கனை வட்டரெக விஜித தேரரின் விகாரைக்கு நேரடியாக விஜயம் செய்து வட்டரெக விஜித தேரருக்கும், குறித்த விகாரையில் அவருடன் தங்கியிருக்கும் பிக்குகள் மூவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக கிராந்துறு கோட்டே போலிஸ் நிலையத்தால் மஹியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள பொது பல சேனாவின் பதுளை மாவட்ட இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மஹியங்கனை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான கே பி குணவர்தன வுக்கு எதிரான இருவேறு வழக்குகள் 2017/07/26ந் திகதி (நாளை) மகியங்கனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளன.

வழக்கு இல 94865/14 ன் கீழ் விசாரிக்கப் படவுள்ள இவ்வழக்கில் வட்டரெக விஜித தேரரின் சார்பில் மூன்று பலமிக்க சாட்சியாளர்கள் நாளை ஆஜராகவுள்ளனர். 

குறித்த பொது பல சேனாவின் பதுளை மாவட்ட இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மஹியங்கனை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான கே பி குணவர்தன கடந்த காலங்களில் பொது பல சேனா சார்பாக பல இனவாத செயற்பாடுகளில் செயற்பட்டமைக்கு எதிராக பலவழக்குகள் சுமத்தப் பட்டவர் என்பதும் இவர் அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மூலம் ஸ்ரீலங்கா சுதைந்திர கட்சியின் மகியங்கன தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டவர் என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்.  

வட்டரக்க தேரருக்கு BBS முக்கியஸ்தர் கொலை அச்சுருத்தல் விடுத்த வழக்கு நாளை ! வட்டரக்க தேரருக்கு BBS முக்கியஸ்தர் கொலை அச்சுருத்தல் விடுத்த வழக்கு நாளை ! Reviewed by Madawala News on 7/25/2017 11:11:00 PM Rating: 5