tg travels

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்..


அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால் இவ்வாண்டும் அகில இலங்கை ரீதியாக உள்ள வரிய குடும்பங்களை சேர்ந்த தகுதியுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் கண்டியில் 15.07.2017 சனிக்கிழமையும் கொழும்பில் 16.07.2017ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது. புலலமைப்பரிசில் பெற தகுதியான அனைவருனக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

கண்டியில் நடைபெறும் நிகழ்வில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை,​ அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கேகாலை, குருநாகலை பொலந்நறுவை, அநுராதபுரம், வவுனியா,மன்னார், யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 15.07.2017 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபம் மதீனா தேசிய பாடசாலை, மடவள பஸார் என்ற இடத்தில் நடைடிபெறும்.

 கொழும்பில் நடைபெறும் நிகழ்வில் கொழும்பு, களுத்துறை, புத்தளம் அம்மாந்தோட்டை, இரத்தினபுரி ,கம்பஹ, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்தவர்களுக்கு கொழும்பில் 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் கேட்போர்கூடம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை 63இ ஸ்ரீ வஜிரஞான மாவத்தைஇ கொழும்பு-09 என்ற இடத்திலும் நடைபெறும்.

புலமைப்பரிசில் பெற தெரிவு செய்யப்பட்டோர் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்புக்கடிதத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் தவராது கலந்து கொள்ளும்படி வேண்டிக்கொகிள்றோம்.

​​​​​ மேலதிக விபரங்களுக்கு சஹீத் எம்.ரிஸ்மி 0777 391 691 அல்லது எம்.எஸ்.றஹீம் 0777 6461 71 என்ற இலக்கத்தினுடாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி

வஸ்ஸலாம்

இங்கனம்

உங்கள் உண்மையுள்ள

சஹீத் எம்.ரிஸ்மி

புலமைப் பரிசில் குழுத் தவிசாளர்

(தேசிய பொதுப் பொருளாலர்)

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்.. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்.. Reviewed by Madawala News on 7/13/2017 12:21:00 AM Rating: 5