tg travels

மாட்டிறைச்சி வைத்திருந்தாக கூறி ஜுனைத் என்ற வாலிபரை கொன்றவன் கைது ! 


மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜூனைத் கான் என்னும் 16 வயது சிறுவன், கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். 






கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி தனது சகோதரர்களுடன் ரயிலில் பயணம் செய்தபோது, சக பயணி ஒருவர் இருக்கையைப் பகிர்வதில் ஜூனைத் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாட்டிறைச்சி திண்பவன் தானே நீ எனச் சொல்லி ஜூனைத் மற்றும் அவனது சகோதரர்கள் சக பயணிகளால் தாக்கப்பட்டனர். இதில் ஜூனைத் கான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியக்குற்றவாளி மகாராஷ்டிரா மாநிலம் துலி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளான். இதுவரை அவனைப் பற்றிய எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை. கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கருவியும் இன்னமும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை.






முன்னதாக காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பான தகவல்களைத் தருபவர்களுக்கு ரூ.2லட்சம் சன்மானம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. இந்தக் கொலையில் ஈடுபட்டவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பகுதியில் செக்யூரிட்டியாக பணியில் சேர்ந்து தலைமறைவு வாழ்க்கை வந்தது தெரிய வந்தது. மேலும், ஜூனைத்தின் சகோதரர்கள் தந்த தகவல்களின் படி முக்கியக்குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.






நாடு முழுவதும் பசுவின் பெயரால் அப்பாவிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் #NotInMyName என்ற பெயரில் தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாடுமுழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பசு சேகவர்கள் என்று சொல்லிக்கொண்டு அப்பாவிகளைத் தாக்குபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். தற்போது ஜூனைத்தைக் கொன்றவன் பிடிபட்டுள்ள நிலையில் ஜூனைத்தின் அப்பா குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.




நன்றி: நக்கீரன்.

மாட்டிறைச்சி வைத்திருந்தாக கூறி ஜுனைத் என்ற வாலிபரை கொன்றவன் கைது !  மாட்டிறைச்சி வைத்திருந்தாக கூறி ஜுனைத் என்ற வாலிபரை கொன்றவன் கைது !  Reviewed by Madawala News on 7/10/2017 12:13:00 AM Rating: 5