Ad Space avaiable

நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுப்பதில் அரசாங்கம் தற்பொழுது ஈடுபட்டுள்ளது ..


நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுப்பதில் அரசாங்கம் தற்பொழுது ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் பியகம ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரை இன்று காலை சந்தித்த வேளை பிரதமர் இதனை கூறினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் பிரவேசித்து இன்றுடன் 40 வருடங்கள் நிறைவடைகின்றன.அத்தோடு பிரதமர் பியகம தேர்தல் தொகுதியை பிரதிநித்துவப்படுத்தி இவர் அரசியலை ஆரம்பித்ததான் காரணமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இதற்கான அடிப்படை வகுக்கப்பட்டுள்ளது. கடவத்தையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் 2020ம் ஆண்டுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும். மத்தல் சர்வதேச விமான நிலையம் முறையான வகையில் முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படும். 

ஹம்பந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கான உடன்படிக்கை விரைவாக கைச்சாத்திடப்படும். உமாஓய திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து அந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

1977ம் ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த நிலையை மாற்றி  அந்த மாவட்டதை அபிவிருத்தி செய்ய தன்னால் முடிந்தாக பிரதமர் தெரிவித்தார்.

 கம்பஹா மாவட்டத்தை எரிசக்தி கேந்திரமாக தரமுயர்த்தி முதலீட்டு மேம்பாட்டு வலயம் ஒன்று ஆரம்பிக்கப்படும். 2025ம் ஆண்டளவில் நாடு எதிர்நோக்கியுள்ள கடன் பிரச்சினைக்கு முழு அளவில் தீர்வு காணப்பட்டு விடும் என்றும் பிரதமர் அங்கு கூறினார். 

நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் பொழுது அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். விசேடமாக இளம் சமூகத்தினரின் பங்களிப்பு இதற்காக கிடைக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் அரசியல் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை தற்பொழுது நடைபெறுகிறது.

1977ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆறாயிரத்து 700 மேலதிக வாக்குகளை பெற்று முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்பொழுது தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். தமக்கு அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பிரதமர் இங்கு நன்றியைத் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுப்பதில் அரசாங்கம் தற்பொழுது ஈடுபட்டுள்ளது .. நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுப்பதில் அரசாங்கம் தற்பொழுது ஈடுபட்டுள்ளது .. Reviewed by Madawala News on 7/23/2017 12:01:00 PM Rating: 5