tg travels

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் ..


இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதன் கூறினார். 


டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் பங்கேற்கும் விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. 

இதைதொடர்ந்து நிருபர்களிடம் முரளிதரன் கூறியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக நான் இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. அதனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எல்லா அணிக்கும் உள்ள பிரச்சினை தான் தற்போது இலங்கை அணிக்கும் ஏற்பட்டுள்ளது. 

விரைவில் அவர்கள் அதை சரிசெய்துகொள்வார்கள்.எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் உள்ளன. எனினும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானலும் நடைபெறலாம். கடந்த சில ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சாளர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

கடைசி இரு நாட்களில் அவர்களுக்கு விக்கெட்கள் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உலகம் முழுவதும் தற்போது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனுடன் செயல்படுகின்றனர் என முரளிதரன் கூறினார்.



இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் .. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் .. Reviewed by Madawala News on 7/16/2017 02:28:00 PM Rating: 5