Ad Space avaiable

மக்களால் நிராகரிக்கபட்டவர்களின் முஸ்லிம் கூட்டமைப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு எதிரான முஸ்லிம் கூட்டமைப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உருப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டேசனின் தலைவருமாகிய ஏ.சீ. யஹியாகான் அவர்கள் கல்முனையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில் அதிகாரங்கள் தங்களுடைய கைகளில் இருக்கின்ற போது இச்சமூகத்தின் மீது காட்டாத அக்கறை இன்று அதிகாரங்கள் இல்லாத நிலையில் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக பாசாங்கு செய்வது வேடிக்கையாக இருப்பதோடு மாத்திரமல்ல இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை தனித்தனியே முட்டி மோதி மூக்குடைந்தவர்கள் எல்லோரும் இன்று கூட்டணியாக சேர்ந்து இந்த பாரிய இயக்கத்தை ஓரம் கட்டி தாங்கள் நினைத்தவற்றை அடையலாம் என நினைப்பது அவர்களுடைய மடமையை காட்டுகின்றது என குறிப்பிட்டார்.


மேலும், இக்கட்சிக்கும், அதன் தலைமைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலபத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களில் கொந்தராத்துக்காரர்களை வைத்துக்கொண்டு கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும் எழுதிய இவர்களின் பருப்பு வேகவில்லை என்பதையும் மறந்து மீண்டும் முஸ்லிம் கூட்டமைப்பு எனும் தோரணையில் மக்களை குழப்பி இவர்கள் குளிர்காயலாம் என நினைப்பதானது பகல்கனவுக்கு ஒப்பானது என்றார்.


ஆகவே இச்சமூகத்திற்கு இவர்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, சமூகத்தினை குழப்பாமல் ஓரத்தில் நின்று கொண்டு பார்வையாளர்களாக இருப்பதே இவர்களுக்கு நல்லது. ஏனெனில், மக்கள் இக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களை நிராகரித்து எப்போதே ஓரம் கட்டிவிட்டார்கள். இன்னும் இவர்களுக்கு இவ்விடயங்கள் புரியவில்லை என்றால் கடந்த காலங்களில் இப்பாரிய இயக்கத்தை அழிக்க நினைத்து மண் கௌவியவர்களின் பட்டியலில் எதிர்காலத்தில் இவர்களும் சேர்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மக்களால் நிராகரிக்கபட்டவர்களின் முஸ்லிம் கூட்டமைப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. மக்களால் நிராகரிக்கபட்டவர்களின் முஸ்லிம் கூட்டமைப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. Reviewed by Madawala News on 7/24/2017 01:01:00 PM Rating: 5