Ad Space avaiable

புதிய அரசியலமைப்பு அவசியமில்லை ; பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு ..

இன்று மாலை மூன்று முக்கிய பீடங்களும் கூடி புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அஸ்கிரிய, மல்வத்து , அமரபுற , ராமன்ய ஆகிய பீடங்கள் உள்ளிட்ட பீடங்கள் இன்று மாலை கூடி இந்த தீர்மானத்தை அறிவித்தது.

தேர்தல் திருத்தம் தவி­ர்ந்து அர­சியல் அமைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை புதிய அர­சியல் அமைப்­புக்கு பெளத்த பீடம்  முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என அஸ்­கி­ரிய பீடம் தெரி­வித்­துள்­ள நிலையில் இன்று மாலை நான்கு முக்கிய பீடங்களும் கூடி புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அர­சியல் அமைப்பு தொடர்பில் அர­சியல் வாதி­களின் கருத்­துக்­களில் நம்­பிக்கை இல்லை.புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய  நிலைமை வரும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

புதிய அரசியலமைப்பு அவசியமில்லை ; பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு .. புதிய அரசியலமைப்பு அவசியமில்லை ; பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு .. Reviewed by Madawala News on 7/04/2017 07:12:00 PM Rating: 5