Kidny

Kidny

அபாயாவைக் கழற்றித் தீயிடும் பெண்! தாடியே வேண்டாமென மழிக்கும் ஆண்!


எஸ். ஹமீத்

ISIS...ஒரு மர்மத்தின் பெரும் முடிச்சு. ஒரு மாயத்தின் மிகச் சிறந்த வரைவிலக்கணம். இஸ்லாமிய தேசத்துக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு இஸ்லாமியர்களையே கொன்றொழித்த நவீன யுக சாத்தான்களின் பெரும் பாசறை. கன்னி கழியாச் சிறுமிகளையும் தம் காமத்துக்குப் பலியாக்கிய சதிகாரக் கும்பலின் கரும் குகை.

மிக ஆரம்பத்திலேயே ஐ எஸ் அமைப்பு மீது உண்மையான முஸ்லிம் தேசங்களுக்குப் பெரும் சந்தேகம் இருந்து வந்தது. அகன்ற இஸ்லாமிய கிலாபத்தை நிறுவுவதற்கான புனிதப் போர் என்று முரசறிவித்து, இஸ்லாம் சொல்லாத வழிகளிலும், இஸ்லாம் வெறுக்கின்ற வகைகளிலும் அராஜகங்களையும் அட்டூழியங்களையும் செய்யத் தொடங்கிய அந்த அமைப்பின் தோற்றுவாய் அமெரிக்காதான் என்பதும் பலருக்குத் தெரிந்திருந்தது. ஆயினும் பல்வேறு நாடுகளிலும் வெகு கச்சிதமாக மூளைச் சலவை செய்யப்பட்ட முட்டாள்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களில் தொண்ணூற்றொன்பது தசம் தொண்ணூற்றொன்பது வீதமானோர்க்கு ஐ.எஸ். அமைப்பின் உண்மையான நரி முகம் தெரிந்திருக்கவில்லை.

சமகாலத்தில் மட்டுமல்ல, எல்லாக் காலங்களுக்கும் இஸ்லாத்தின் முதலாவது பரம எதிரி இஸ்ரேல்தான். உண்மையான ஜிகாதிகளாக இருந்திருந்தால் ஐ.எஸ். அமைப்பானது தனது ஆள் பலம், ஆயுத பலம் என்பவற்றைக் கொண்டு இஸ்ரேலின் மீது புனிதப் போர் தொடுத்திருக்க முடியும். ஆனால், இஸ்ரேல் இருக்கும் திசை நோக்கிக் கூட அது தனது துப்பாக்கியின் ஒரு தோட்டாவைத்தானும் தீர்த்ததில்லை. ஏனெனில் அமெரிக்காவின் கைக்கூலிகளான இந்த அமைப்பு இஸ்ரேலின் பிரகடனம் செய்யப்படாத உற்ற நண்பன்.

சிரியாவும் ஈராக்கும் லிபியாவும் ஐ.எஸ். ஆரம்பித்த யுத்தத்தினால் கால்வாசிக்கும் மேலாக எரிந்து கருகிவிட்டன. மக்கள் வாழ்ந்த பூமிகள் வெறும் மயானங்களாகக் காட்சி தருகின்றன. பல இலட்சம் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. இன்னும் பல பத்து இலட்சம் மக்கள் அங்கவீனர்களாகிவிட்டனர். ஐம்பது இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் கேட்டுச் சென்றுவிட்டனர். மேலும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட பொருளாதார நஷ்டம் இந்த நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தாமே உருவாக்கிய அமைப்பு தமக்கெதிராகவும் திரும்பிவிடலாமெனும் பயத்தினாலும் , தம்மீது உலக நாடுகளுக்குச் சந்தேகம் வரக்கூடாது என்ற எண்ணத்தினாலும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரானவர்களாகத் தம்மை அமேரிக்கா நிரூபிக்க முயன்றது. அது மாத்திரமன்றி, ஐ.எஸ். அமைப்புகளின் மீது வீசுவதாக அது பாவ்லா காட்டிய ஒவ்வொரு குண்டுகளும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளின் இஸ்லாமிய மக்களைக் கொன்றன; அந்த நாடுகளின் கட்டிடங்களைத் தரை மட்டமாக்கின. அவற்றின் பொருளாதார வளங்களை நாசம் செய்தன. சுருக்கமாகச் சொல்வதானால், பேயை விரட்டுவதற்குப் பதிலாகப் பேய் பிடித்த பெண்ணைச் சவுக்காலடித்துச் சித்திரவதை செய்து கொல்லும் கேடுகெட்ட பூசாரியாகவே அமெரிக்கா நடந்து கொண்டது. இந்த விடயத்தில் ரஷ்யாவும் கூட அமெரிக்கா வகித்த அதே பாத்திரத்தைத்தான் வகித்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தனது கொடுரங்களினால், அராஜகங்களினால் பலகீனமான மக்களின் ஈமானை அசைத்துவிடுகின்ற நோக்கத்தில் ஐ.எஸ். அமைப்பு மிகச் சிறிய அளவில் வெற்றி கண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதற்கு இங்கு பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவும் படங்களும் சான்று பகரும். தனது அபாயாவைக் கழற்றித் தீ வைத்துக் கொளுத்தும் பெண்ணும் தனது சுன்னத்தான தாடியை மழித்துக் கொள்ளும் சிரியாவின் ராக்கா பிரதேசத்து ஆணும் ஐ.எஸ். மீதான கோபத்தில் தமது உயர்ந்த மார்க்கத்தின் விழுமியங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். இவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்துவதும் யகூதிய எச்சில் இலைகளான ஐ.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றுதான்.

ஆயினும், உறுதியான ஈமானை உள்ளத்தில் வளர்த்துக் கொண்ட ஆண்களையோ பெண்களையோ ஏன் சிறுவர், சிறுமியரையோ ஆயிரம் ஐ.எஸ். அமைப்புகள் வந்தாலும் எதுவும் பண்ணிவிட முடியாது!

அல்லாஹ் என்றுமே பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.


அபாயாவைக் கழற்றித் தீயிடும் பெண்! தாடியே வேண்டாமென மழிக்கும் ஆண்! அபாயாவைக் கழற்றித் தீயிடும் பெண்! தாடியே வேண்டாமென மழிக்கும் ஆண்! Reviewed by Madawala News on 7/27/2017 08:37:00 PM Rating: 5