tg travels

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் மற்றும் கணிய வள தொழிற் சங்கங்கள் ..


தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான தீர்வுகளை இரண்டு வாரங்களின் பின்னரும் முன்வைக்கா விட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தபால் தொழிற்சங்கம் மற்றும் அதன் ஒருமித்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தபால் திணைக்களம் மற்றும் சேவையாளர்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில்  கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தோம்.

இப்பிரச்சினை தொடர்பில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவுடனான ஒப்பந்தங்கள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தமது யோசனைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என, தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


அதேநேரம் நாட்டின் தலைவர்களான, ஜனாதிபதி,மற்றும் பிரதமர் ஆகியோருடன் எதிர்வரும் 14ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால்,அதன்பின்னர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க இருப்பதாக, கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசாங்க வைத்திய சங்கம் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.



வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் மற்றும் கணிய வள தொழிற் சங்கங்கள் .. வேலை நிறுத்தத்திற்கு தயாராகும்  தபால் மற்றும் கணிய வள தொழிற் சங்கங்கள் .. Reviewed by Madawala News on 7/11/2017 04:40:00 PM Rating: 5