tg travels

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் என்னால் ஆஜராக முடியாது ..


பிணை முறி முறைகேடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தனக்கு இன்றும் ஆஜராக முடியாது என வெளிநாட்டு அமைச்சர் ரவி கருனாநாயக்க அவ்வாணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.


பிணை முறி முறைகேட்டில் சிக்கியுள்ள அர்ஜுன் அலோசியசின் நிறுவனத்திடம் 14 லட்சம் மாத வாடகையில் வீடு ஒன்றுக்கு வாடகை பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக பெண் ஒருவர் ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்துள்ள நிலையில் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள அமைச்சர் ரவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று தன்னால் ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்க முடியாது என ரவி கருனாநாயக்க அறிவித்திருந்த நிலையில் இன்றும் தன்னால் சமூகமளிக்க முடியாது எனவும் ஆகஸ்ட் 2 ம் திகதி தான் விசாரணை குழுவின் ஆஜராவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் என்னால் ஆஜராக முடியாது .. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் என்னால் ஆஜராக முடியாது .. Reviewed by Madawala News on 7/26/2017 11:37:00 AM Rating: 5