Ad Space avaiable

அல்லாஹ்வை அவமதித்த முகநூல் பதிவுக்கு பதில் அளித்த தந்துரை வாலிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு ..


முகப்புத்தகத்தில் அல்லாஹ்வை அவமதித்த பெரும்பான்மை நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு,புத்த பெருமானை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றிய காரணத்தில் கைது செய்யப்பட்ட கண்டி தந்துறை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வாலிபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


இன்று குறித்த வழங்கி விசாரணைக்கு வந்த போது குறித்த வாலிபரை வரும் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதத்துக்குள் அதிகமாக குறித்த வாலிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என அந்த வாலிபரின் பெற்றோர் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.


பகிரங்கமாக இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அல்லாஹ்வை அவமதிக்கும் விதத்திலும் உரையாற்றிய ஞானசார தேரருக்கு முதலில் மிக கடுமையாக பீ அறிக்கை சமர்பித்த பொலிஸார் பின்னர் பீ அறிக்கையை மாற்றி அவருக்கு அவசர பிணை வழங்க முடியுமானால் அதைவிட குறைவான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒரு மாதகாலத்துக்கு மேலாக விளக்கமறியலில் இருந்தும் சலுகை கிடைக்காமல் போனது ஏன் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்டில் வன்முறையை விரும்பாத முஸ்லிம்களில் ஒரு சிலர் இவ்வாறு ஆத்திரத்தில் பிறர் மனம் புன்படும் வகையில் நடந்துகொள்வது குறித்து விமர்சிப்பவர்கள் இந்த முஸ்லிம் இளைஞரையும் அவரது உணர்வுகளையும் தூண்டி விடும் வகையில் கருத்து நடந்துகொண்டவரகள் தொடர்பில் குறை கூறாமல் இருப்பது கவலையளிப்பதாக சமூக ஆர்வளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


அல்லாஹ்வை அவமதித்த முகநூல் பதிவுக்கு பதில் அளித்த தந்துரை வாலிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு .. அல்லாஹ்வை அவமதித்த முகநூல் பதிவுக்கு பதில் அளித்த தந்துரை வாலிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு .. Reviewed by Madawala News on 7/27/2017 03:22:00 PM Rating: 5