Kidny

Kidny

பெற்றோலிய கூட்டுதாபன பணி பகிஷ்கரிப்பு எதிரொலி ! பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு ..


பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை நிலவியதையடுத்து நாளை காலை 10.30 மணி வரை சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதே நேரம் பாராளுமன்ற இன்றைய அமர்வின் போது இடம்பெற்ற சர்ச்சை மற்றும் கூச்சல் குழப்பங்களின் மத்தியிலும் 7 நிதிச் சட்டமூலங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தொடர்பில் பிரதமர் விடுத்த அறிவிப்பையடுத்து இடம்பெற்ற குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமான நிலையில், தொடர்ந்தும் அந்த அறிவிப்பு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, டினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, நளின் பண்டார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கிடையில் முரண்பாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் சபையில் பெரும் கூச்சல் குழப்பங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் அரசாங்கம் அவசரஅவசரமாக 7 நிதிச் சட்டமூலங்களை சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பெற்றோலிய கூட்டுதாபன பணி பகிஷ்கரிப்பு எதிரொலி ! பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு .. பெற்றோலிய கூட்டுதாபன பணி பகிஷ்கரிப்பு எதிரொலி ! பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு .. Reviewed by Madawala News on 7/26/2017 04:32:00 PM Rating: 5