Ad Space Available here

எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தற்போது தற்காலிமான தீர்வு ஒன்றைக் காண முடிந்துள்ளது.


எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் கையாளும் போது புகழுக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்திற்காகவோ செயற்படுகின்ற விடயமாகப் பார்க்கக் கூடாது.குறிப்பாக எமது சமூகம் சார்ந்த பிரச்சினை விடயம் தொடர்பாக கையாளும் போது மிகுந்த அவதானத்துடனும் மதிநுட்பத்துடனும் உரிய முறையில் கையாள வேண்டும். ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்களையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.கடந்த காலத்தில் எமது சமூகப்பிரச்சினைகளை எமது முஸ்லிம்கள் தலைவர்கள் நிதானமாகச் செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.அந்த வழியிலதான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். 


அதன் காரணத்தினால் தான் இன்று எமது சமூகத்திற்கு எதிராக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு இன்று ஒரு தற்காலிமான முற்றுப் புள்ளியை வைக்க முடிந்துள்ளது.இது நிரந்தரமான முற்றுப்புள்ளி அல்ல.இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் நிரந்தரமான தீர்வுவினைப் பெற்றுக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எச். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


மடவளை கலாபூசணம் நிசார் எழுதிய பாடல்களின் இருவெட்டு வெளியீட்டு விழா மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் (8) இடம்பெற்றது.


அவர் அங்கு தொடர்ந்து பேசும் போது

 

மடவளை கலாபூசணம் நிசார் தமிழ் இலக்கியத்துறையில் தனித்துவமான நின்று இஸ்லாமிய பாடல்கள் இயற்றுகின்ற துறையில் சிறந்த ஒரு பாடலாசிரியர்.அவரது பாடல்களில் கருத்துச் செறிவான இஸ்லாமிய மார்க்க ஒழுக்க விழுமியங்களும் இஸ்லாமிய வரலாறுகளும் பிரதி பலிக்கக்கின்றன.அதே போன்று பாடலுக்கு ஏற்றவiயில் சிறார்களுக்கு நடனப் பயிற்சி வழங்கி மேடையேற்றி மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பதிலும் அவர் சிறந்து விளங்குகின்றார்.அவரது எழுத்துறையின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பல கௌரவங்களையும் பட்டங்களையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.


அவரது பாடல்கள் உண்மையிலேயே மடவளை மண்ணுக்கு மட்டுமல்ல முழு இலங்கை நாட்டுக்கும் சிறார்களுக்கும் பயன்பெறக் கூடியவை. எனவே அவரது பாடல்கள் என்றும் அழியாத எண்ணக் கருக்களை கொண்டவை.பழைமைவாய்ந்த பாடலகளில் நிறையக் கருத்துக்கள் பொதிந்து காணப்படுகின்றன. குறிப்பாக கண்ணதாசன், வைரமுத்து எழுதிய பாடல்கள் என்றும் விரும்பிக் கேட்கக் கூடியதாக இரக்கின்றது. 


ஆனால் சமகாலத்தில் வெளிவரும் பாடல்களைக் கேட்பதற்குகான பாடல்கள் இல்லை.ஏனோ தானோ என்ற வகையில் எழுத்தப்பட்ட பாடல் வரிகளைத்தான் கேட்க் கூடிதாக இருக்கின்றது.கண்ணதாசன் எழுதிய பாடசாலைப் பார்த்தால் ஒரு சமூகத்திற்குத் தேவையான படிப்பினை அதில் பொதிந்து காணப்படும். அதே நிசாரின் பாடல்களிலும் இஸ்லாமிய மேம்பாட்டுக்கான எழுச்சிக் கருத்துக்கள் காணப்படுகின்றன.

எமது சமூப்பிரச்சினைகளை கையாளும் போது நாம் நிதானமும் புத்திகூர்மையும். தீட்சன்னியத்துடனும் அனுகுதல் வேண்டும். கடந்த காலத்தில் எமது சமூப்பிரச்சினைகளை திர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டன. 

என்னுடைய மாமனார் முன்னாள் அமைச்சர் ஏ, சீ, எஸ். ஹமீத் அவர்கள் கூட எதனையும் சமயோகிதமாகத் தான் கையாண்டு சமூக இணக்கபாட்டுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தவர்.நான் கூட அவரது அரசியல் பாசறையில் வளர்ந்தவன் என்ற வகையில் அவரது அனுபவப் பின்புலங்களுடனேயே செயற்பட்டு வருகின்றேன்.

அந்தவகையில் தான் தற்போதைய நாட்டிலுள்ள எமது பிரச்சினைக்கு எதிராக சமயோகிதமான முறையில் தீர்வு காண வேண்டியிருக்கிறது.எமக்கு எதிரான பிரச்சினையை மிகுந்த நிதானத்துடன் மேற்கொண்டதன் காரணமாக இன்று எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தற்போது தற்காலிமான தீர்வு ஒன்றைக் காண முடிந்துள்ளது.இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினத்தவர்கள் என்ற வகையில் எங்களுக்கு சவால்கள் இல்லை என்று அல்ல இன்னும் பல சவால்கள் எதிர்நோக்க வேண்டிய நிலைகள் ஏற்படலாம். அப்படியான ஒரு நிலை ஏற்படாமல் நிரந்தரமான சமூகமான நிலையை உருவாக்குவதற்கான முயற்சிககள் பல இருக்கின்றன. அந்தவகையிலேயே நாங்கள் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.


சில பிரச்சினைகள உரிய முறையல் கையாண்டு அதற்குரிய தீர்வுகளை நாங்கள் பெற்று இருக்கின்றோம். எமது சமூகம் சார்ந்த சார்ந்தப் பிரச்சினைகள் தொடர்பாக புகழுக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்திற்காகவோ செயற்படுகின்ற விடயமல்ல சமூகம் சார்ந்த பிரச்சினை விடயம் தொடர்பாக கையாளும் போது மிகுந்த மதிநுட்பத்துடன் உரிய முறையில் கையாள வேண்டும்.இப்படிப்ட்ட நடவடிகளையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.அதனால் தான் இன்று ஒரு முற்றுப்புள்ளி தற்காலிமாக வைக்கப்பட்டுள்ளது. அது நிரந்தரமான தீர்வுவினைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.


இன்று நாட்டில் பல்வேறு வகையிலான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. சைட்டம் பிரச்சினை ஒரு பக்கம் மறுப்பக்கம் குப்பைப் பிரச்சினை.இப்படியாக பல பிரச்சினைகளை நாடு எதிர் நோக்கியிருக்கின்றது.

இக்பால் அலி

 

 

எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தற்போது தற்காலிமான தீர்வு ஒன்றைக் காண முடிந்துள்ளது. எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தற்போது தற்காலிமான தீர்வு ஒன்றைக்  காண முடிந்துள்ளது. Reviewed by Madawala News on 7/10/2017 02:39:00 PM Rating: 5