tg travels

மத்திய மாகாண ஆசிரியர் நியமனம் மேன்முறையீட்டுக்கான காலம் நீடிப்பு..


மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்காத ஆசிரிய/ஆசிரியைகள் மேன்முறையீடு செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்கவுடன் நடாத்திய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

மாகான சபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், லாபிர் ஹாஜியார், இப்ராஹிம் ஹாஜியார், தபால் மற்றும் முஸ்லீம் கலாச்சார அமைச்சர் ஹலீமின் செயலாளர்கள் எம்.பாயிஸ், எம். பாரூக் ஆகியோர் மத்திய மாகாண ஆளுனருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

எனவே, மேன்முறையீடுகளை செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீடுகளை, கீழ்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். 

Secretary,

Central Province Education Ministry,

Provincial Council Complex,Pallekela. 

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் ஹலீமின் ஊடகசெயலாளர் ரஷி ஹாஷிம் தெரிவித்தார். தொலைபேசி இலக்கங்கள் -0773163150 0772226042, 07760436766, 0772277517, 0772649690, 0757038874, 0750566767.

மத்திய மாகாண ஆசிரியர் நியமனம் மேன்முறையீட்டுக்கான காலம் நீடிப்பு.. மத்திய மாகாண ஆசிரியர் நியமனம் மேன்முறையீட்டுக்கான காலம் நீடிப்பு.. Reviewed by Madawala News on 7/26/2017 10:19:00 PM Rating: 5