tg travels

ஹிஸ்புல்லாஹ் மைத்திரி பக்கம் !


கூட்டு அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியானதன் பின்னர், அதிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலர் கலந்துரையாடி வருவதாக மவ்பிம பத்திரிகை வெளியிட்டுள்ள நிலையில்.

சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, டி.பி.ஏக்கநாயக்க, நிமல் லன்சா, அருந்திக பெர்னாண்டோ,லக்ஸ்மன் வசந்த பெரேரா, நிசாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, டுலிப் விஜயசேகர,சுமேதா ஜயசேன,தாராநாத் பஸ்நாயக்க, இந்திக்க பண்டாரநாயக்க,பிரியங்கர ஜயரத்ன மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் பெயர்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.


இது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

தான் அவ்வாறான எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ள வில்லை என குறிப்பிட்ட அதேவேளை தான் தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் இருந்து அவரின் கரங்களை பலப்படுத்துவதுடன் முஸ்லிம் சமூக விடயங்களில் அரசாங்கத்திற்கு உள்ளே இருந்து குரல் கொடுப்பதாக குறிப்பிட்டார்.

சுயாதீனமாக செயற்படபோவதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் தனது பெயரும் வெளியானது தொடர்பில் உண்மையில்லை என அவர் மறுப்பு வெளியிட்டார்.


அதேநேரம் இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள சு க சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சஎ டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன ..


அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதால் எமது கட்சி வலுவிழக்கின்றதே ஒழிய வலுப்பெறவில்லை என நான் தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஒப்பந்தம் முடிவடையும் வரை இணைந்திருக்குமாறு அவர் கூறினார். அது தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொண்டு ஆராய்ந்து வருகின்றோம்.


ஹிஸ்புல்லாஹ் மைத்திரி பக்கம் ! ஹிஸ்புல்லாஹ் மைத்திரி பக்கம் ! Reviewed by Madawala News on 7/16/2017 04:17:00 PM Rating: 5