Ad Space Available here

நாட்டில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாளை அறிக்கை ..


நாட்டில் பௌத்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நாளை சமர்பிக்க தீர்மாணித்துள்ளதாக மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் நேற்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டு ஒருமனதாக தீர்மாணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பௌத்த சின்னங்களை , தொல் பொருட்களை சேதப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பௌத்த மதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்த இந்த அறிக்கை மூலம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லையென இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ள அதேவேளை நாட்டில் தற்போது புரையோடிப்போயுள்ள சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் அவசரமாக தீர்வு காணவேண்டுமெனவும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது எனவும்  தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது ஏகமனதாக  முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாளை அறிக்கை .. நாட்டில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாளை அறிக்கை .. Reviewed by Madawala News on 7/05/2017 05:27:00 PM Rating: 5