tg travels

விடுதலை புலிகள் நீக்கம் ! ஹமாஸ் தொடர்ந்து நீடிப்பு ...


ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ள அதேவேளை பலஸ்தீன் ஹமாஸ் அமைப்பு அந்த பட்டியலில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த உத்தரவை, இன்று பிறப்பித்துள்ளதாக அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் இயக்கம், தொடர்ந்தும் தடைப்பட்டியலில் நீடிக்கின்றது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த அமைப்பு தொடர்பில் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளும் பதிவாகாத நிலையில், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் நீக்கம் ! ஹமாஸ் தொடர்ந்து நீடிப்பு ... விடுதலை புலிகள் நீக்கம் ! ஹமாஸ் தொடர்ந்து நீடிப்பு ... Reviewed by Madawala News on 7/26/2017 08:12:00 PM Rating: 5