Kidny

Kidny

தாலிபானை உருவாக்கியது யார்?


Muja ashraff 

ஆப்கானை விட்டு சோவியத் ஒன்றியம் வெளியேறிய பின் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்த நஜிபுல்லா ஆட்சி, அமெரிக்க- பாக் உதவியுடன் தாக்கிய முஜாகிதீன்களை எதிர்கொள்ள இயலாமல் வீழ்ந்தது.

அதன்பின் பாகிஸ்தான், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளின் பின்பலத்தில் ஹெக்மத்யார், தோஸ்தம், மசூத் குழுவினரிடையே அதிகாரப் போட்டியும் உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.


இந்நிலையில், ஒரு உறுதியான ஆட்சியை (எண்ணெய்க் குழாய்க்கு தேவையான அளவு உறுதி) ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் தாலிபான் குழு. “அமெரிக்காவும், பிரிட்டனும்தான் தாலிபான்களைப் பயிற்றுவிப்பதற்கான செலவை ஏற்றுக் கொண்டனர்” என்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான பெனாசிர் புட்டோ தி நேஷன் நாளேட்டிற்கு 1997இல் அளித்த பேட்டியில் ஒப்புக் கொள்கிறார்.


1996 செப்டம்பரில் தாலிபான் படை காபூலைக் கைப்பற்றியவுடன் அடுத்த சில மாதங்களிலேயே காண்டகாரில் தனது அலுவலகத்தைத் திறந்தது அமெரிக்க யூனோகால் நிறுவனம்.


தாலிபான் நடத்திய கொலைவெறியாட்டமும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பான பொய் பித்தலாட்டங்களும் உலகப் புகழ் பெற்றுவிட்டதால், தானே சோறு போட்டு வளர்த்த தாலிபான் அரசை அங்கீகரிக்க முடியாமல் தவித்தது அமெரிக்க அரசு. ஆனால் அமெரிக்காவின் பினாமியான சவூதி அரசும், அடியாளான பாகிஸ்தான் அரசும் தாலிபானை உடனே அங்கீகரித்தன.


வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் போர்த் தந்திரத்திற்கும் சவூதி-பாக்-தாலிபான் கூட்டணிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஈரானைத் தனிமைப்படுத்துவது மட்டுமின்றி ஈரான் ஆட்சியை கவிழ்ப்பதற்கென்று 20 மில்லியன் டாலரை அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகவே ஒதுக்கியுள்ளது. இந்தப் பணம் ரகசியமாகத் தாலிபானுக்கு தரப்பட்டுள்ளதாக ஈரான் அமெரிக்காவைக் குற்றம் சாட்டுகிறது.


இது ஒருபுறமிருக்க, சவூதி மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான “டெல்டா ஆயில்” நிறுவனம் அமெரிக்காவின் யூனோகால் நிறுவனத்தில் ஒரு முக்கியப் பங்குதாரார். மேலும் ஷியா முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன், சுன்னி முஸ்லீம் நாடுகளான சவூதி, மற்றும் பாகிஸ்தானுக்குப் பகை. எனவே சவூதி ஷேக்குகளும், பாகிஸ்தான் உளவாளிகளும், தாலிபான்களும் சுன்னி முஸ்லீம்கள் என்ற முறையில் மட்டுமின்றி அமெரிக்காவின் கூட்டாளிகள் என்ற முறையிலும் ஒன்று சேர்ந்தனர்.

தாலிபானை உருவாக்கியது யார்? தாலிபானை உருவாக்கியது யார்? Reviewed by Madawala News on 7/20/2017 07:06:00 PM Rating: 5