tg travels

காத்தான்குடியில் உடற்பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியொதுக்கீடு!


(ஹாசிப் யாஸீன்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் காத்தான்குடியில் உடற் பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு ரூபா 30 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிதி ஒதுக்கீடு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்கப்படவுள்ள இவ் உடற்பயிற்சி நடைபாதை நடைப் பயிற்சிக்கென ஆற்றங்கரைக்கு வரும் பெண்களுக்கென அமைக்கப்படவுள்ளது. ஆற்றங்கரை வீதிக்கு அதிகமான ஆண்களும் பெண்களும் நடைப்பயிற்சிக்கு வருவதால் பெண்கள் பிரத்தியேகமாக நடப்பதற்கென இப்பாதை அமைக்கப்படவுள்ளது. அத்துடன் இந்நடைபாதையின் ஓரமாக நிழல் தரும் மதுரை மரங்களும் நடப்படவுள்ளன. அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்காவிற்கு அண்மையிலிருந்து குபா ஜும்ஆப் பள்ளிவாயல் அருகாமை வரை இந்நடைபாதை அமைக்கப்படவுள்ளது. மேற்படி வேலைத்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலகமூடாக செயற்படுத்தப்படவுள்ளதாக இணைப்புச் செயலாளர் முபீன் தெரிவித்தார்.

மேலும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழக மைதான அபிவிருத்திக்கு ரூபாய் 10 லட்சமும், மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டுக்கழக மைதான அபிவிருத்திக்கு ரூபாய் 10 லட்சமும் வவுணதீவு விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ரூபாய் 57 இலட்சமும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் உடற்பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியொதுக்கீடு! காத்தான்குடியில் உடற்பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியொதுக்கீடு! Reviewed by Madawala News on 7/25/2017 09:55:00 AM Rating: 5