tg travels

சவுதி இளவரசரும் பிரபல முதலீட்டாளருமான  பஹ்த் பின் முக்ரின் ஸில் அப்துல் அஸீஸ் இலங்கை வந்தடைந்தார் ..


அஷ்ரப் ஏ சமத்-

சவுதி அரேபியாவின் இளவரசர் தற்போதைய இளவரசரரின் சகோதரரும் முன்னணி முதலீட்டு வர்த்தகதுமான இளவரசர் பஹ்த் பின் முக்ரின் ஸில் அப்துல் அஸீஸ் மற்றும் தூதுக்குழுவினரும் இன்று (21) பி.பகல் கொழும்பை வந்தடைந்தனர்.

இவர்களை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் விமானநிலையத்தில் வைத்து வரவேற்றார். இவர்களுக்கான சகல ஏற்பாடுகள் சந்திப்புக்களை இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டுள்ள அதேவேளை அஷ் செய்யத் காதர் மசுர் மௌலாநாவும் இந்தநிகழ்வில் கலந்து கொண்டார்.  

இவ் சவுதி தூதுக் குழு இலங்கையில் 4 நாட்கள் தங்கியிருக்கும் அவர் அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமசிங்க, வெளிநாட்டு அமைச்சர் ரவி கருநாயக்காவையும் சந்திக்கவுள்ளார்.  

இலங்கை வர்த்தக முதலீடுகள் பற்றியும் கலந்துரையாடவுள்ள இளவரசர் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கும் செல்ல உள்ளார்.

சவுதி இளவரசரும் பிரபல முதலீட்டாளருமான  பஹ்த் பின் முக்ரின் ஸில் அப்துல் அஸீஸ் இலங்கை வந்தடைந்தார் .. சவுதி இளவரசரும் பிரபல முதலீட்டாளருமான  பஹ்த் பின் முக்ரின் ஸில் அப்துல் அஸீஸ் இலங்கை வந்தடைந்தார் .. Reviewed by Madawala News on 7/21/2017 10:53:00 PM Rating: 5