Kidny

Kidny

தேர்தலை பிற்போடும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை !


இவ்வருட இறுதியில் மூன்று மாகாண சபைகளின் காலம் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து மாகாண சபைகளுக்காக தேர்தல்களையும் ஒரே தினத்தில் திருந்தங்களுடன் நடத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படுள்ள நிலையில் ,


மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு அமைச்சரவைக்கு அங்கீகாரம் இல்லை என கேபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவ்வமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீரித்தி தென்னகோன் 

மாகாண சபை தேர்தலை பிற்போட அமைச்சரவைக்கு மட்டுமல்ல பாராளுமன்றத்தின் 3 இல் இரண்டு பெருன்பான்மையால் கூட முடியாது என தெரிவித்துள்ளார்.

சுதத்திர கட்சி தேர்தல்களை பிற்போட்டு வந்துள்ள நிலையில் பிரதான இரு கட்சிகளும் தேர்த்து தேர்தல்களை பிற்போடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேல் நீதிமன்ற உத்தரவுகளை மீறி தேர்தலை பிற்போடும் இந்த அரசு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலைக்கூட பிற்போட வாய்ப்புள்ளதாக இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை பிற்போடும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை ! தேர்தலை பிற்போடும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை ! Reviewed by Madawala News on 7/28/2017 10:45:00 AM Rating: 5