Ad Space avaiable

கடும் நெருக்கடிக்குள் ரவி ! 


நல்லாட்சி அரசுக்குள் நெருக்கடி உச்ச நிலையை அடைந்திருப்பதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


முறி மோசடியில் சிக்கி உள்ள அர்ஜுன் அலோசியசின் கம்பனி ஊடாக அப்போதய நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க 10000 டொலர் மாத வாடகையில் சொகுசு வீடு ஒன்றைப் பெற்றுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியம் அளித்துள்ள நிலையில் நிதி அமைச்சர் நிதி நிறுவனத்திடம் லஞ்சமாக இதை பெற்றுள்ளதாக இந்த விடயம் அமைந்துள்ளது.


ஏற்கனவே இரண்டு தடவைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரவி இரண்டு தடவைகள் சமூகமளிக்காமல் தவிர்ந்து வந்த நிலையில் எதிர்வரும் மாதம் 3 ம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராவதாக சட்டத்தரணி மூலம் அவர் அறிவித்துள்ளார்.


இந்த விடயத்தில் ரவி கருனாநாயக்கவின் வசமாக மாட்டிகொண்டுள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.முறி மோசடியில் பிரதமரின் பெயரையே எதிர்கட்சிகள் கூறிவந்த நிலையில் தற்போது ரவி கருனாநாயக்க பக்கம் இந்த விடயம் தற்போது நகர்ந்துள்ளது.


தற்போது ஜனாதிபதியின் பக்கம் ரவி கருனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் சாய்ந்து வருவதாகவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் நொருக்கடி நிலமை தோன்றியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.



கடும் நெருக்கடிக்குள் ரவி !  கடும் நெருக்கடிக்குள் ரவி !  Reviewed by Madawala News on 7/27/2017 01:22:00 PM Rating: 5