Ad Space avaiable

ஜனாதிபதிக்கு பொதுபல சேனா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்தது..


தாங்கள் அமைப்பு அஸ்கிரிய பீடத்திடம் முன்வைத்த கோரிக்கையை செவிசாய்த்த ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பொதுபல சேனா அமைப்பு நன்றி

தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் பௌத்த மக்களுக்கு எதிராக நடக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளை ஆராய ஒரு சூயாதீன கமிஷன் ஒன்றை நியமிக்குமாறு கடந்த மாதம் நாம் அஸ்கிரிய பீடத்திடம் வேண்டி இருந்தோம். அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்த பீடம் ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இதனை எடுத்துக்கூறி விரைவில் இந்த கமிஷனை நியமிக்க உத்ரவாதத்தை பெற்றுள்ளதாக அறிய முடிந்தது.

இது தொடர்பில் பொது பல சேனா அமைப்பாக நாம் அஸ்கிரிய பீடம் ஊடாக நாம் முன்வைத்த எமது கோரிக்கையை ஏற்றமைக்காக எமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் என அவ்வமைப்பு கூறியுள்ளது.

இந்த கடிதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாளயம் அஸ்கிரிய பீடம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.



ஜனாதிபதிக்கு பொதுபல சேனா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்தது.. ஜனாதிபதிக்கு பொதுபல சேனா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்தது.. Reviewed by Madawala News on 7/08/2017 12:21:00 AM Rating: 5