Kidny

Kidny

பிரதமரிடம் மீண்டும் கேள்வி எழுப்புவேன் : எஸ்.எம். மரிக்கார் எம்பி 


அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் பச்சைப் பொய்யாகும் என மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட அங்குள்ள வர்த்த சமூகம் தெரிவித்துள்ள நிலையில் .


இது தொடர்பில் நாம் எஸ்.எம்.மரிக்கார் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது

தான் கடந்த மாதம் பிரதமரிடம் இது தொடர்பில் மன்றில் கேள்வி எழுப்பியதாகவும் அவர் அமெரிக்க சென்று இருந்ததால் இம்முறை அமர்வில் அவர் பதில் அளித்ததாகவும் குறிப்பிட்ட அவர் , 

அதனை தொடரும் அளுத்கம - தர்ஹாநகர் வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய விபரத்தை ஸிராஸ் நூர்தீனிடம் கேட்டதாகவும் பிரதமர் பதில் அளித்த சில மணி நேரங்களுக்கு பின்னரே தனக்கு அந்த விபரங்கள் கிடைத்தாக குறிப்பிட்டார்.பிரதமர் பதில் அளித்த போது தன்னிடம் இது தொடர்பிலான தரவுகள் இல்லாததன் காரணத்தால் தான் அங்கு கேள்வி எழுப்பவில்லை என கூறிய அவர் சமூக பிரச்சினை தொடர்பில் கேள்விகேட்க எவரைப்பார்த்தும் தான் அஞ்சப்போவதில்லை எனவும் எதிர்வரும் அமர்வில் தன்னிடம் உள்ள தரவுகளை வைத்து பிரதமருடன் கேள்வி எழுப்பபின் நிற்க போவதில்லை என குறிப்பிட்டார்.

ஜனாதிபதியோ பிரதமரோ எவராக இருந்தாலும் முகத்தில் கேட்பதே தனது நடைமுறை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதமரிடம் மீண்டும் கேள்வி எழுப்புவேன் : எஸ்.எம். மரிக்கார் எம்பி  பிரதமரிடம் மீண்டும் கேள்வி எழுப்புவேன் : எஸ்.எம். மரிக்கார் எம்பி  Reviewed by Madawala News on 7/09/2017 12:40:00 AM Rating: 5