Ad Space avaiable

மக்களின் குறை தீர்க்க வந்துவிட்டது பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு ..


மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் அலுவலக பணிக்குழுவின் பிரதித்தலைவர் ரோஸி சேனாநாயக்க இதில் கலந்து கொண்டார். 

இலக்கம் 101இ ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளதோடுஇ முறையான முகாமைத்துவத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படவுள்ளது. 

பொறுப்புக் கூறலுடன் கூடிய மக்கள் சேவையை முன்னெடுப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முன்னர் இந்தப் பிரிவுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதன் தலைவராக அரச நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜே.தடல்லகே நியமிக்கப்பட்டுள்ளார். 

மக்களின் குறை தீர்க்க வந்துவிட்டது பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு .. மக்களின் குறை தீர்க்க வந்துவிட்டது பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு .. Reviewed by Madawala News on 7/20/2017 10:09:00 PM Rating: 5