Kidny

Kidny

பர்தா அணிந்து வந்த மாணவிகளை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர் !


அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் .


இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க

மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. 

இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவுடன் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரின் தந்தை குறிப்பிட்டார்.



பர்தா அணிந்து வந்த மாணவிகளை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர் ! பர்தா அணிந்து வந்த மாணவிகளை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர் ! Reviewed by Madawala News on 7/15/2017 03:14:00 PM Rating: 5