Ad Space Available here

அன்று சிரிகொத்தவுக்குள் வைத்து ஞானசாரரை தாக்க முடிந்த ரனிலுக்கு இன்று ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை ..


ஞானசார என்ற நடிகனை வைத்து தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் அரங்கேற்றிய நாடகம் தொடர்பில் மக்கள் தெளிவு பெற்றுகொண்டுள்ளதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.


களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.


அங்கு மேலும் கருத்துவெளியிட்ட அவர் ..


முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்து பிரிக்க அரங்கேற்றப்பட் சதி நாடகம் பொதுபல சேனா நாடகம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.


மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளை நாம் மீட்டுப் பார்த்தால் எமக்கு விடை கிடைத்துவிடும்.


எவராலும் அடக்க முடியாது என்ற விம்பத்தில் பறந்து திரிந்த ஞானசார தேரர் கடந்த மகிந்த அரசில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தினுள் நுழைத்து அடிவாங்கி வந்த விடயம் அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.


ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் சிறுபான்மை மக்களை திருப்பவும் ஞானசார தேரருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் எந்தவிதமான தொடர்புகளுமில்லை என மக்கள் நம்பவைக்கவும் அரங்கேற்றப்பட்ட ஒரு காட்சியே குறித்த சம்பவமாகும்.


அதே ஞானசார சதி நாடகத்தின் ஒரு பகுதியாகவே கோத்தாபய ராஜபக்‌ஷவை பொதுபல சேனா அவர்களது காரியாளயத்தை திறந்து வைக்க அழைத்து அவருக்கு ஆதரவான ஒரு அமைப்பை போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்கள். இந்த விடயங்களை நாட்டு சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் நம்பினார்.இந்த நல்லாட்சிக்கு வாக்கும் அளித்தனர்.


ஞானசார தேரர் தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் உச்ச அளவில் விமர்சனம் செய்வார். இருந்த போதிலும் தன்னை அடித்து கேவலப்படுத்திய ரணிலை தனது இலக்கில் எப்போதும் கொள்ளவில்லை.அது ஏன் என்ற வினாவில் பல விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.


அன்று சிரிகொத்தவுக்குள் வைத்து எல்லை மீறிய ஞானசார தேரருக்கு தாக்குதல் நடத்த முடிந்த பிரதமர் ரணிலும் இன்று அவர் ஒரு மதகுரு என்பதால் அடக்க முடியாமலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதுவே நகைச்சுவையாக உள்ளது.


அது போன்றுதான் மிக அண்மையில் ஞானசார தேரரை கைது செய்யும் நாடகமொன்று நடைபெற்றிருந்தது.அந்த நாடகத்தோடு ஞானசார தேரர் தனது வாலை சுருட்டிக் கொண்டு அடங்கிவிட்டார் அதன் பின்னனியிலும் காராணம் இல்லாமல் இருக்க முடியாது.இதனை இவ்வரசுக்கு ஆரம்பத்திலேயே செய்யத் தெரியாமலில்லை. எல்லா விடயமும் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடக்கிறது என்பது தான் இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயமாகும். 


இந்த நாடகத்தில் ஞானசார தேரர் மிகவும் காரசாரமான வார்த்தை கொண்டு பிரதமர் ரணிலை திட்டுகிறார்.நாடகமென்று வந்துவிட்டால் சொல்லிக் கொடுப்பதை சொல்லியேயாக வேண்டும்.அதில் ஒரு வசனம் தான் குறித்த பிரதமர் ரணிலுக்கு எதிரான பகுதியும் கூட. தன்னை கடுமையாக பேசிய ஞானசார தேரரில் வார்த்தை தொடர்பில் பிரதமர் ரணில் வாய் திறக்கவே இல்லை.


ஞானசார தேரர் விடயத்தில் முஸ்லிம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். அதனை சீர் செய்யும் ஒரு பகுதியாகவே பிரதமர் தொடர்பில் ஞானசார தேரர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொன்னார்.


பிரதமர் ரணில் தான் இக்கைதின் பின்னால் உள்ளார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.ஞானசார தேரரின் பின்னால் ரணில் உள்ளாரா என்ற வினாக்களை மக்கள் மனதிலிருந்து அழித்துவிட நினைத்தார்.ஜனாதிபதியே தன்னை பாதுகாக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கினார்.இவை அனைத்தும் திட்டமிட்ட ஞானசார தேரர் நாடகத்தின் அங்கங்கள் என்பதையுன் இந்த நாடகத்தின் பல அங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரங்கேரும் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அன்று சிரிகொத்தவுக்குள் வைத்து ஞானசாரரை தாக்க முடிந்த ரனிலுக்கு இன்று ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை .. அன்று சிரிகொத்தவுக்குள் வைத்து ஞானசாரரை தாக்க முடிந்த ரனிலுக்கு இன்று ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை .. Reviewed by Madawala News on 7/24/2017 11:01:00 PM Rating: 5