Kidny

Kidny

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு அரசுக்குள்ளே கடும் எதிர்ப்பு ..


நீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட ஹம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட்டது.


இந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தொடர்பின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த அமைசாரவை கூட்டத்தில் இது தொடர்பில் நீதி அமைச்சர் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட உள்ள பிரதிகூலங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது அமைச்சர்கள் சரத் அமுனுகம பிரதமர் ,சஜித் உள்ளிட்டவர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்றில் இது தொடர்பில் விவாதித்த பின்னர் தீர்மானம் ஒன்ற எடுக்குமாறு ஜனாதிபதி குறிபிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சரவை நிறைவடைந்த பின்னர் அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிட்டுள்ள அர்ஜுன ரனதுங்க..

"நான் இந்த விடயத்தின் பின்னணியில் உள்ள உண்மையை அறிவேன் பேசி வேலையில்லை. என்னை அமைச்சில் இருந்து நீக்கி விட்டு இந்த வேலையை செய்வதற்க்கு பெருத்ததமான ஒரு ஒருவரை அமைச்சராக நியமித்து வேலையை முடித்துள்ளார்கள்"

என மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு அரசுக்குள்ளே கடும் எதிர்ப்பு .. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு அரசுக்குள்ளே கடும் எதிர்ப்பு .. Reviewed by Madawala News on 7/29/2017 12:56:00 PM Rating: 5