Ad Space avaiable

ரவியை பதவி நீக்கவும் ! அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் ..


முறி மோசடியில் சிக்கியுள்ள பெர்பசுவல் ஸ்டரீஸ் கம்பனியின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் சொகுசு வீட்டுத்தொகுதிக்கு வாடகை பெற்றுக்கொண்ட சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி , சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மோசடியில் ஈடுபட்டதாக சிக்கலில் மாட்டியுள்ள ஒருவரிடம் நிதி அமைச்சராக இருந்து கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள சர்ச்சையில் சிக்கியுள்ள ரவியை ஜனாதிபதியும் பிரதமரும் பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர கூட்டு எதிர்கட்சி ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..

ரவியை பதவி நீக்கவும் ! அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் .. ரவியை பதவி நீக்கவும் ! அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் .. Reviewed by Madawala News on 7/30/2017 09:41:00 AM Rating: 5