tg travels

இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டனர் ;


இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டதாக சட்டத்தரணி ஸிராஸ் நூர்தீன் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பென் எமர்சனை சந்தித்த ஸிராஸ் நூர்தீன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அலுத்கமை கலவரம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலை பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டபடவில்லை எனவும் அவர்களுக்கு இந்த அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

45நாட்களில் 25 முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர் நீதிமன்றத்திலும் நாம் நீதியை வேண்டி போராட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டனர் ; இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டனர் ; Reviewed by Madawala News on 7/14/2017 10:18:00 PM Rating: 5