Ad Space Available here

கனவான் அரசியல்வாதி ஏ.ஆர்.எம்.மன்சூர்


தமிழ் முஸ்லிம் ஐக்­கி­யத்­துக்­காக அய­ராது உழைத்த கண்­ணி­யவான் அர­சி­யல்­வா­தி­யான அப்துல் றசாக் மன்­சூரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழ் முஸ்லிம் ஐக்­கி­யத்­துக்கும் இந்த நாட்­டுக்கும் அர்ப்­ப­ண த்­தோடு பணி­யாற்­றிய அவர் 25ஆம் திகதி ஜுலை 2017இல் எம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கடைசித் தலை­மு­றையைச் சேர்ந்த அவரின் நல்­ல­டக்கம் அவ­ரது சொந்த ஊரான கல்­மு­னையில் இடம்­பெற்­றது.


மன்சூர் பற்றி அவரின் அன்­றைய வகுப்­பறைத் தோழி திரு­மதி ராஜேஸ் கந்­தையா மன்­சூரை கௌர­விக்கும் வகையில் வெளி­யி­டப்­பட்ட ஒரு நினைவு மலரில் இப்­படிக் கூறு­கின்றார்.


“நான் அவரை ஒரு அன்­புக்­கு­ரிய நண்­ப­னாக உரிமை கோரும் அதே­வேளை, மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் மன்­சூரை தமது சொந்த மண்ணின் மைந்­த­னாக உரிமை கோரு­கின்­றனர். அவரை நான் அவரின் முதற்­பெயர் கொண்டே அழைக்­கலாம். பாட­சாலை வாழ்வில் இருந்து பிரியும் வரை நாம் ஒன்­றா­கவே படித்தோம். ஆனால் அந்த நட்பின் பிணைப்பு இன்று வரை நீடிக்­கின்­றது. உயர் பாட­சா­லை­யி­லா­யினும் சரி அல்­லது சட்டக் கல்­லூ­ரி­யி­லா­யினும் சரி ஒரு மாண­வ­னாக இருந்த காலத்தில் கூட மன்சூர் விடாமுயற்சி உடை­ய­வ­ரா­கவும் உயர் இலக்­கு­களை அடையும் ஆற்றல் கொண்­ட­வ­ரா­க­வுமே காணப்­பட்டார். மக்கள் நலன் அவர் மனதில் எப்­போதும் காணப்­பட்­டது. ஏழை­களின் உயர்ச்­சிக்­காக அவர் அய­ராது உழைத்தார். அவர் இதை புக­ழுக்­காக செய்­ய­வில்லை. மாறாக சமூ­கத்தில் கீழ் மட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு உதவ வேண்டும் என்ற உய­ரிய நோக்­குடன் அர்ப்­ப­ணத்­தோடு அதில் ஈடு­பட்டார்.


அதிக இலாபமீட்டித் தரும் வகையில் அவர் சட்­டத்­து­றையில் பிர­வே­சித்­தி­ருக்­கலாம். ஆனால் அதைச் செய்­யாமல் அவர் அர­சி­யலில் ஈடு­பட்டார். இந்த முடி­விலும் கூட நாட்­டுக்கும் தனது தொகுதி மக்­க­ளுக்கும் சேவை­யாற்ற வேண்டும் என்ற அவரின் எண்­ணத்­தையே நாம் உணர முடி­கின்­றது. அவர் ஐ.தே.க. அரசில் வர்த்­தக வாணிப துறை அமைச்­ச­ராக வெளி­நா­டு­க­ளுடன் சாத்­தி­ய­மான உற­வு­களை ஸ்தாபித்தார். குவைத் மற்றும் பஹ்ரேன் நாடு­க­ளுக்­கான தூது­வ­ராக அவர் சர்­வ­தேசப் பங்­கா­ளி­க­ளுடன் நல்­லெண்­ணத்­தையும் சமா­தா­னத்­தையும் ஸ்தாபித்தார்.


மன்சூர் முழு அள­வி­லான ஒரு கனவான். அவர் நினைத்­தி­ருந்தால் ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, அமைச்­ச­ராக, சமூக சேவ­க­ராக பணத்தை சம்­பா­தித்­தி­ருக்­கலாம். ஆனால் அவரின் கரங்கள் சுத்­த­மா­னவை, அவரின் சாதா­ரண வாழ்க்கை செல்­வத்தை வேண்டி நிற்­க­வில்லை. அவர் குறைந்­த­ளவு வச­தி­க­ளோடு எளி­மை­யாக வாழ்ந்தார். ஆனால் அவரின் உள்ளம் எப்­போ­துமே பெரி­ய­தாக இருந்­தது. அதுதான் அவரை எல்­லோரும் விரும்பும் ஒரு நப­ரா­கவும் மாற்­றி­யது. அவரின் எளி­மையும் பண்பும் அவர் பழ­கிய மக்­களைக் கவர்ந்­தது. அவ­ரது மக்­க­ளுக்கு தொடர்ந்து சேவைபுரிய அவ­ருக்கு எல்லாம் வல்ல இறைவன் உடல் மற்றும் உள ரீதி­யான ஆரோக்­கி­யத்தை அளிக்க பிரார்த்­திக்­கின்றேன்” என்று திரு­மதி.ராஜேஸ் தெரி­வித்­துள்ளார்.


மன்சூர் எப்­போதும் இன நல்­லி­ணக்­கத்­துக்­காக பாடு­பட்­டவர். இன்று அவர் தீவிர அர­சி­யலில் இல்­லா­விட்­டாலும் கூட அவரின் சிந்­த­னைகள் இன்றும் மக்கள் மனங்­களில் உள்­ளன. பல சந்­தர்ப்­பங்களில் நான் அவ­ருடன் பேசு­கின்ற போது அவர் கூறும் முக்­கிய விடயம்

“கிழக்கில் முஸ்­லிம்கள் தமி­ழர்­க­ளுடன் இணைந்து தத்­த­மது நலன்­களைப் பேணிக் கொண்டு இணக்­க­மாக வாழ வேண்டும். ஏனைய பிர­தே­சங்­களில் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்­தி­ருப்­பது போல்தான் இதுவும். முஸ்­லிம்­க­ளோடு இணைந்து பெரும்­பா­லான தமி­ழர்­களும் எனக்கு வாக்­க­ளித்­துள்­ள­தா­கவே நான் எண்­ணு­கின்றேன். அவர்­களும் தமது பிர­தி­நி­தி­யாக என்னைத் தெரிவு செய்­துள்­ளனர். இன நல்­லி­ணக்­கத்தின் அந்த பொன்­னான நாட்­களை இன்­னமும் நான் எண்ணிப் பார்க்­கின்றேன். துர­திஷ்­ட­வ­ச­மாக குறு­கிய நோக்கம் கொண்ட சுய­நல அர­சி­யலால் அந்த இன நல்­லி­ணக்­கமும் சமா­தா­னமும் அழிக்­கப்­பட்­டது”.


1992 அகஸ்ட் 22இல் கல்­மு­னைக்­குடி மக்­களால் மன்­சூரின் சேவை­களை கௌர­வித்து ஒரு வர­வேற்பு நிகழ்வு இடம்­பெற்­றது. அதில் வெளி­யி­டப்­பட்ட நினைவு மல­ருக்கு காலஞ்­சென்ற நீலன் திருச்­செல்வம் அனுப்­பி­யி­ருந்த செய்­தியில்  

“திருச்­செல்வம் குடும்­பத்­துக்கு மன்சூர் மிக நெருங்­கிய நண்­ப­ராகத் திகழ்ந்தார். மன்சூர் அவ­ருடன் மிக நெருங்­கிய நிலையில் பணி­யாற்­றி­யுள்ளார். ஐம்­பதாம் ஆண்­டு­களின் நடுப்­ப­கு­தியில் அவர் ஒரு சட்ட மாண­வ­ராக இருந்த போதே இந்த நாட்டின் இளை­ஞர்கள் பற்­றிய எண்­ணத்தை பாதித்த, அர­சியல் போராட்­டத்தால் உணார்ச்சி வசப்­பட்­ட­வ­ராகக் காணப்­பட்டார். 1958 மொழிப் போராட்­டத்தின் போது காலி முகத்திடலில் இடம்­பெற்ற ஒரு சத்­தி­யாக்­கி­ர­கத்தின் போது ஒரு கும்­பலின் தாக்­கு­த­லுக்கும் அவர் ஆளானார்”.


எவ்­வா­றா­யினும் அதனைத் தொடர்ந்து வந்த அர­சியல் சந்­தர்ப்­ப­வாதம் பல பொய்­களை விற்­பனை செய்து ஏமாற்று வித்­தை­களைப் பரப்பி அர­சியல் ரீதி­யாக மக்­க­ளிடம் இருந்து அவரை ஓரம் கட்­டி­யது. பிரி­வி­னை­வாத அர­சி­யலில் சிக்கி மன்­சூரை கைவிட்­டது எவ்­வ­ளவு பெரிய மடத்­தனம் என்­பதை புரிந்துகொள்ள கிழக்கு மாகாண மக்­க­ளுக்கு கிட்­ட­த­்தட்ட கால் நூற்­றாண்­டுகள் சென்­றன. இந்தப் பாதிப்பை ஈடு செய்ய கல்­முனை மற்றும் அதனை சூழ­வுள்ள பிர­தேச மக்கள் 2013 அக்­டோபர் 19இல் மன்­சூ­ருக்கு மகத்­தான வர­வேற்­பொன்றை ஏற்­பாடு செய்­தனர்.


இது தொடர்­பான மல­ருக்கு ஆக்­கங்­களை வழங்­கிய பிர­ப­லங்கள் பலர் மேற்­சொன்ன தவ­றுக்­காக வருத்தம் தெரி­வித்­தி­ருந்­தனர். அத்­தோடு மன்­சூரின் சமூகநலன் சார்ந்த சேவைக்­காக அவரை மனப்­பூர்­வ­மாகப் பாராட்­டியும் இருந்­தனர். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­களின் உள்­ளங்­களில் அவரின் சேவை இன்­னமும் பசு­மை­யாக உள்­ள­தென்றும் அவர்கள் வர்­ணித்­தி­ருந்­தனர்.


மன்சூர் வர்த்­தக வாணிப துறை அமைச்­ச­ராக இருந்த போது அவரை சந்­திக்கச் சென்ற ஒரு கோடீஸ்­வர வர்த்­தகக் குழுவில் ஒருவர் அவ­ருக்கு இலஞ்சம் வழங்கும் வகையில் பேசிய போது தனது ஆச­னத்திலிருந்து எழுந்து நின்ற மன்சூர் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரையில் இனி நீங்கள் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அவரை அங்­கி­ருந்து வெளி­யேறும் படி கூறினார்.


ஊழ­லிலும் இலஞ்­சத்­திலும் சிக்கித் தவிக்கும் இன்­றைய அர­சியல்வாதி­க­ளி­டமி­ருந்தும் மிகவும் தூர­மான ஒரு விட­ய­மா­கவே இதைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது.


அண்­மையில் தென்கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் தனது பட்­ட­ம­ளிப்பு விழாவின் போது மன்­சூ­ருக்கு கௌரவ கலா­நிதி பட்டம் வழங்கி கௌர­வித்­துள்­ளது. இந்த விழாவின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்சூருக்கு இந்த கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கியிருந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக அவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள இலங்கை சமூகம் கடந்த வருடம் அவரை கௌரவித்தது. அவரின் மகள் மரியம் நலிமுத்தீன் தெற்கு அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வைபவத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

கனவான் அரசியல்வாதி ஏ.ஆர்.எம்.மன்சூர் கனவான் அரசியல்வாதி ஏ.ஆர்.எம்.மன்சூர் Reviewed by Madawala News on 7/31/2017 01:03:00 AM Rating: 5