tg travels

ரஷ்யாவின் ஆப்கான் போர் !


Muja ashraff 

1979 – இல் இதே இடத்தில் ரசிய ராணுவம் நின்று கொண்டிருந்தது. ஆப்கானின் போலி கம்யூனிஸ்டு ஆட்சியை காப்பாற்றவும் அதன் மூலம் தெற்காசியாவில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் ஆப்கானில் நுழைந்தது ரசியா.

ரசியாவுடனான பனிப்போரை (Cold War) பதிலிப் போராக மாற்றும் வாய்ப்பை (Proxy War) இது அமெரிக்காவுக்கு வழங்கியது.


கம்யூனிசத்திற்கும், தேச விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக இசுலாமிய பழமைவாதத்தை பயன்படுத்தும் தந்திரம் அமெரிக்காவுக்கு புதியதல்ல. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் அராபிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்டு எழுச்சியையும், மன்னர்களுக்கும் முல்லாக்களுக்கும் எதிரான ஜனநாயகப் போராட்டங்களையும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு இசுலாமிய மதவாதத்தை தான் அமெரிக்காவும், பிரிட்டனும் பயன்படுத்தின.


ஆப்கானில் ஆட்சியிலிருந்த போலி கம்யூனிஸ்டுகள் பெண் கல்வி, வேலை வாய்ப்பு, நிலச்சீர்திருத்தம், மதச்சீர்திருத்தம் போன்றவற்றை அமல்படுத்தத் தொடங்கியவுடனே பண்ணையார்களும், பழங்குடித்தலைவர்களும், முல்லாக்களும், பழமைவாதிகளும் அவற்றை எதிர்க்கத் தொடங்கினர். ஜனநாயகம் என்ற சொல்லுக்கே எதிரான இந்த சக்திகளை அமெரிக்கா திட்டமிட்டே உக்குவித்தது.


மதத்தால் இசுலாமியர்களாக இருந்தாலும் புஷ்டுன், தாஜிக், உஸ்பெக் என்று இன உணர்வால் பிளவுபட்டிருந்த மக்கள், ரசிய எதிர்ப்பு ஆப்கானிய தேசிய உணர்வுக்கு ஆட்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டது அமெரிக்கா. ஆப்கான் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு இசுலாத்தின் மீதான நாத்திக – கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பாகச் சித்தரிக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஆப்கான் போர் ! ரஷ்யாவின் ஆப்கான் போர் ! Reviewed by Madawala News on 7/12/2017 02:18:00 PM Rating: 5