tg travels

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் பாராட்டு ..


ஜனாதிபதி முன்னெடுத்துவரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தேரர் பாராட்டியுள்ளார்.


அஸ்கிரிய மஹா விஹாரையின் ஸ்ரீ தலதா அறநெறிப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கருத்தரங்குத் தொடரின் நான்காவது கருத்தரங்கில்  அதி சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தேரர் உரையாற்றினார்.

நாட்டின் முதலாவது பிரஜை என்ற வகையில் எதிர்கால சந்ததிக்கு முன்மாதிரியாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் பாராட்டத்தக்கது என்று தேரர் சுட்டிக்காட்டினார். சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சமயப் பிரிவு மற்றும் விதுல சிறுவர் வானொலியுடன் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யு.எம்.திலகரத்ன இங்கு பிரதான உரையை நிகழ்த்தினார்.

போதைப்பொருள் பாவனை மத விழுமியங்களுக்கு எதிரான ஓர் பேரனர்த்தமாக மாறியுள்ளது. இதிலிருந்து நாட்டின் எதிர்கால சந்ததியை பாதுகாப்பதற்காக கட்சி பேதங்கள் இன்றி ஜனாதிபதி மேற்கொண்டு வரும் இந்தச் செயற்பாட்டுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இது நாட்டின் வயது வந்தவர்களுக்குரிய பொறுப்பும் கடமையுமாகும் என்றும்  அதி சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தேரர் மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் பாராட்டு .. ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் பாராட்டு .. Reviewed by Madawala News on 7/24/2017 12:36:00 PM Rating: 5